fbpx
Connect with us

Cinemapettai

பேரன்பு இது படம் அல்ல உன்னதமான அன்பு. லைக்ஸ் குவிக்குது படம் பார்த்துவிட்டு மெட்ராஸ் கலையரசன் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பேரன்பு இது படம் அல்ல உன்னதமான அன்பு. லைக்ஸ் குவிக்குது படம் பார்த்துவிட்டு மெட்ராஸ் கலையரசன் பதிவிட்ட ஸ்டேட்டஸ்.

பேரன்பு

தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ள இயக்குனர் ராமின் படம். மம்முட்டி, அஞ்சலி, சாதனா (தங்கமீன்கள்), சமுத்திரக்கனி, மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்: P L தேனப்பன் (ஸ்ரீ ராஜலக்ஷ்மி பிலிம்ஸ்) எழுத்து-இயக்கம்: ராம் இசை: யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் படத்தொகுப்பு: சூர்ய பிரதமன் கலை: குமார் கங்கப்பன்.

Peranbu-

இப்படத்தை பல சர்வதேச திரைப்பட விழாகளுக்கு அனுப்பி வைத்து பல விருதுகளையும் பெற்றது இப்படம். மேலும் படம் வரும் 1 ஆம் தேதி ரிலீசாகிறது. அதனை முன்னிட்டு ப்ரீமியர் ஷோவும் ஸ்க்ரீன் செய்யப்பட்டது. இந்நிலையில் படத்தினை பார்த்துவிட்டு தன் ட்விட்டரில் அழகாக பதிவிட்டுள்ளார் கலையரசன்.

peranbu

வார்த்தைகளே இல்லை இந்த உணர்ச்சியை விவரிக்க. அருமையான படைப்பை கொடுத்துள்ளனர் இயக்குனர் ராம் மற்றும் டீம். அழகாக அதனை படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர். இதனை ஆதரித்த தயாரிப்பாளருக்கு எனது மரியாதையை தெரிவிக்கிறேன். கட்டாயம் பார்க்க வேண்டும், இதனை கொண்டாடவும் வேண்டும்.

அசத்தலான நடிப்பு மற்றும் யுவனின் இசை படத்தின் உயிரோட்டத்தை கூட்டியது. இது படம் அல்ல உன்னத அன்பு. தியேட்டரில் படத்தை பார்த்து நாம் அன்பை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

அஞ்சலி அசாத்தியமாக நடித்துள்ளார் மீரா கதாபாத்திரம் மனதை கவர்ந்தது. என ஸ்டேட்டஸ் தட்டியுளார்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது, காத்திருக்கிறோம் நாமும் இதனை திரையில் கொண்டாட.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top