Connect with us
Cinemapettai

Cinemapettai

ramki-uma

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் ராம்கி அப்படிப்பட்டவரா.! உண்மையை போட்டு உடைத்த பெப்சி உமா.. வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

சின்ன பூவே மெல்ல பேசு, என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ராம்கி.1987 ஆம் ஆண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்த அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இவர் செந்தூரப்பூவே, இணைந்த கைகள், வனஜா கிரிஜா, மாயா பஜார் ,மாசாணி போன்ற படங்களில் நடித்துள்ளார். இணைந்த கைகள் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இன்று வரை இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர், ஆறு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பிரியாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பெப்சி உமா நடிகர் ராம்கியுடன் நடத்திய நேர்காணலில் அவரைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். பெப்சி உமா நடிகர் ராம்கி நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த ஜோதிடர் என்ற யாருக்கும் தெரியாத உண்மையை வெளியே கூறியுள்ளார்.

நடிகர் ராம்கி அவர்கள் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பெரிதும் ஆர்வம் கொண்டவர். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் புதிதாக கண்டுபிடித்துவிட்டால், உடனே ராம்கி அதை வாங்கி விடுவாராம்.

பிரபல நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற நடிகர் விவேக் அவர்கள் ராம்கி சிறுவயதிலிருந்தே ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும் அறிவியல் ரீதியாக அதை கற்றுக் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ராம்கி. டெக்னாலஜியில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் ராம்கி ஒரு டெக்கி என்று யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவலை நடிகர் விவேக்கின் மூலமாக தொகுப்பாளினி பெப்சி உமா நடத்திய நேர்காணலில் தெரியவந்துள்ளது.

vivek

vivek

Continue Reading
To Top