மாசி மாதம் தொடக்கம், வெயில் அதிக அளவு அடிக்க துவங்கும். இந்த மாதம் முதல், வரும் 6 மாதத்திற்கு தமிழகத்தில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை சூடுபிடிக்கும்.

பீட்டா அமைப்பால், இளைஞா்கள், மாணவர்கள், ஜல்லிக்கட்டு போரட்டத்தின் போது, வெளிநாட்டு குளிர்பானைங்களை குடிப்பதை தவிர்க்க முடிவு செய்தனா்.

இதனால், சீசன் துவங்கும் முன்னா் 75 சதவீதம் பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை சரிந்தது.

இந்த நிலையில் வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு வரும் மார்ச்-1ம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்பனை செய்வதை நிறுத்துவதாக அறித்தும் உள்ளனா்.

பீட்டா அமைப்பால் தமிழக மாணவர்கள், இளைஞா்கள் தங்களது நிறுவனத்துக்கு ஆப்பு அடித்து விட்டனரே என்று ஆடிப்போய் உள்ளன வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள்.

இருந்தபோதிலும் பல மால்களில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூவி, கூவி விற்பனை செய்தும் வருகின்றனா். ஆனால் அது தமிழா்கள் மத்தியில் எடுபடவில்லை.

சீசன் காலங்களில் மிகப் பெரிய வருவாய் இழப்பை சந்திக்க வேண்டுமே என்ன செய்வது என்று அந்த நிறுவனங்கள் புலம்பிவருகின்றன.

மாணவா்கள், இளைஞா்கள் முடிவாலும், வணிகர்களின் முடிவாலும், வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் செய்வது அறியாது திணறி வருகின்றன.