Connect with us
Cinemapettai

Cinemapettai

வெளுத்து வாங்கிய மக்கள், பதில் சொல்ல முடியாமல் திணறிய காயத்ரி..!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெளுத்து வாங்கிய மக்கள், பதில் சொல்ல முடியாமல் திணறிய காயத்ரி..!!

பிக்பாஸ் நேயர்கள் பலருக்கும் பிடிக்காத ஒருவர் காயத்ரி நேற்று வெளியேற்றப்பட்டார். இதையடுத்து வெளியே வந்த அவர் கமலை சந்தித்த போது மக்கள் சரமாரியாக கேள்வி கேட்க சில இடத்தில் திணறி போனார் காயத்ரி.

பல கேள்விகளுக்கு மிகவும் சமாளிக்கும் வகையில் அப்படியா நான் பேசினேன், அப்படியா நான் சொன்னேன், அப்படி செய்து இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். வெளியே வருவதற்கு முதல்நாள் தான் நான் இதை விளையாட்டு என்றே உணர்ந்தேன் என்று கூறினார்.

ஓரு ஆசிரியை காயத்ரியிடம் எனக்கு உங்களை பிடிக்காது என்று முகத்துக்கு நேராகவே சொல்லி விட்டார். பின்பு காயத்ரி எனக்கு தமிழ் கற்றுக்கொடுங்கள் என்று கூறிய போது உங்கள் தமிழ் சீராக தான் உள்ளது என்று சொல்லி அவர் செய்ததை குத்திக்காட்டினார்.

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை தங்கள் குழந்தைகளுக்கு காண்பித்து சிலரை போல் நடக்க வேண்டும் சிலரை போல் நடக்க கூடாது என்பதை காண்பிக்க உதவியாய் இருக்கிறது என்று ஓருவர் கூறினார்.

கேள்விகள் முடிந்த பின்பு கமல் எங்கே மக்களாகிய நீங்கள் காயத்ரியிடம் சூட்சமமான கேள்விகளை கேட்டு நான் உங்களை பாதியில் நிறுத்தும்படி செய்ய நேருமோ என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதே போல் அவர் தவறுகளை உணர்ந்துவிட்டார். எனவே அவரை மன்னித்து விடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஓவியா விஷயத்தில் கடைசி முன்று நாட்கள் காயத்ரி நல்லபடியாக நடந்து கொண்டதால் மக்கள் ஒரளவு சமாதானம் அடைந்தனர். கமலுடன் சேர்ந்து டான்ஸ் ஆட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதும் நிறைவேற்றப்பட்டது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top