Connect with us
Cinemapettai

Cinemapettai

actors

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபலங்கள் நிதி கொடுக்க பயப்படுவதே இதுக்குதான்.. நம்ம மக்களும் வில்லங்கமான ஆளுங்கதான்

உலகம் முழுவதும் கொரானா ஆட்டிப் படைத்து வருவதால் அதிலிருந்து மக்களை காப்பாற்ற பலரும் நிதியுதவி கேட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசும் மாநில அரசும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் முடிந்த அளவு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எப்போதுமே இந்த மாதிரி நிதி என்று வந்தால் நாம் அதிகம் எதிர்பார்ப்பது நடிகர்கள் பணம் கொடுப்பார்களா என்று தான். அதற்கு காரணம் கோடிக்கணக்கில் அவர்கள் குவித்து வைத்திருக்கும் சொத்துதான். ஒவ்வொரு நடிகரும் லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை நிதி உதவி செய்து வருகின்றனர்.

ஆனால் சாதாரண மக்களால் 100 ரூபா செலவு செய்யக் கூட யோசிக்க வேண்டியதாக உள்ளது. இருந்தாலும் நம்மிடையே ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ஒருவர் உதவி செய்தால் அந்த உதவியை நினைக்காமல் உதவி செய்வதற்கு அவருக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பதை இந்த பாழாப்போன மூளை யோசிக்க வைக்கும்.

அப்படித்தான் வெகு ஜனங்களுக்கு அந்த யோசனை தோன்றி உள்ளது போல. சமூக வலைதளங்களில் அந்த நடிகர் கோடிக்கணக்கில் சொத்து வைத்திருப்பதால் கொடுக்கிறார் என்று நடிகர்களின் சொத்துக்களை கணக்கு போட ஆரம்பித்துள்ளனர். அதாவது ரஜினிக்கு 5000 கோடி சொத்து இருக்கிறது எனவும் விஜய் அஜித்துக்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் சொத்து இருக்கிறது எனவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

உதவி செய்ய மனம் வரவில்லை என்றாலும் உதவி செய்பவர்களை பாராட்ட வேண்டுமே தவிர இப்படி குறை கூறுவது சரியல்ல எனவும் சிலர் தங்கள் தரப்பு வாதத்தை தெரிவித்து வருகிறது. அவர்களுக்கு இந்த அளவு சொத்து வருவதற்குக் காரணமே மக்கள் தான் என்பதை உணர்ந்து கொள்ள இன்னும் இவர்களுக்கு எத்தனை ஜென்மம் ஆகுமோ தெரியவில்லை.

ஒரு நடிகரை தங்களுக்கு பிடித்து விட்டால் திரும்ப திரும்ப அவரது படங்களை தியேட்டர்களிலும் டிவிக்களிலும் பார்த்து அவருக்கு மவுசு ஏத்தி விடுகிறார்கள். அவர்களும் அதை உபயோகித்து சம்பாதித்துக் கொள்கிறார்கள். இது புரியாமல் இன்னமும் மற்றவர்களை குறை கூறிக் கொண்டுதான் இருக்கிறோம்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நடிகர்கள் தாங்களாக முன்வந்து 50 லட்சம், ஒரு கோடி என எந்த நிதி உதவியும் தரத் தேவையில்லை. அப்படி அவர்கள் கொடுப்பது அவர்களின் பெருந்தன்மை என்பதை உணர்ந்து உதவி செய்பவர்களை பாராட்ட கற்றுக் கொள்ள வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top