Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மக்கள்.. உண்மையான ஒரு விரல் புரட்சி

நாட்டு பிரச்சனையில் அஜித் ரசிகர்கள்
அஜித்தின் விஸ்வாசம் மற்றும் பொங்கல் என இரண்டையும் அனைவரும் திருவிழா போல் கொண்டாடும் இந்நேரத்தில் சிவகாசி அழிவை நோக்கி பயணிக்கிறது. பட்டாசு தொழிற்சாலைகளை நம்பியே இங்கு அனைவரின் வாழ்வாதாரமும் உள்ளது.
பட்டாசை நம்பி அச்சகம் (பிரின்டிங்) அட்டை பெட்டி, பட்டாசுக்கு தேவையான கெமிக்கல் (கெமிக்கல் மூலப்பொருள்) விற்பனை, டிரேடிங், ஏஜென்ஸி, டிரான்ஸ்போர்ட், லாரி இப்படி அத்தனை தொழிலும் முடங்கும் நிலையில் உள்ளது.
அஜித்தின் ஒரு புகைப்படம் உலக அளவில் ட்ரெண்டிங் செய்யும் நம் தல ரசிகர்கள், வரும் 21ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் பட்டாசு வழக்கின் வாய்தா வருவதால் அன்று #SaveSivakasi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் அனைத்து சமூக வலைதளங்களிலும் ட்ரென்ட் செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று சிவகாசி ஊர்மக்கள் தல ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இதனை அனைத்து தல ரசிகர்களும் நிறைவேற்றி நல்ல தீர்ப்பை எதிர்பார்த்து அமைந்தால் கண்டிப்பாக இது அஜித் ரசிகர்கள் செய்யும் ஒரு புரட்சிதான். இதனை முன்மாதிரியாக வைத்து அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் இதனை போன்ற ஒரு விஷயத்தை கண்டிப்பாக செய்வார்கள். நம் பிரச்சினைகள் ஓரளவு முடியும். இதனை அனைத்து ரசிகர்களும் ஷேர் செய்து #SaveSivakasi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் ட்ரென்ட் ஆக கேட்டுக்கொள்கிறோம்.

ajithfans-sivakasi
