ஒரு வடக்கன் செல்ஃபி படம் மூலம் ஹீரோயின் ஆனவர் கேரளாவை சேர்ந்த மஞ்சிமா மோகன். அச்சம் என்பது மடமையடா படம் மூலம் கோலிவுட் வந்தார். இயக்குனர் கவுதம் மேனன் அவரை கோலிவுட் அழைத்து வந்தார்.

விக்ரம் பிரபு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்து முடித்துள்ளார் மஞ்சிமா. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக இப்படை வெல்லும் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஹீரோயின்களின் உடை பற்றி ஒருவர் அசிங்கமாக ட்வீட் போட்டார். இதை பார்த்த மஞ்சிமா கோபம் அடைந்து பதிலுக்கு ட்வீட்டினார். இதை பார்த்த அந்த நபர் தனது ட்வீட்டை நீக்கிவிட்டார்.
உடை பற்றி ட்வீட் போட்ட நபருக்கு மஞ்சிமா அளித்த பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது, ஹீரோயின்களை நிர்வாணமாக பார்க்கத் தான் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு சார். அவர்கள் ஆடை குறைப்பை அல்ல நல்ல படங்களை பார்க்க வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  என் ஹஸ்பெண்ட் வேஸ்ட் அதனால் பிரிந்தேன்… இதில் என்ன தப்பு… காற்று வெளியிடை நாயகி ஒபன் டாக்…