Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

முதல்வர் வேட்பாளரான எடப்பாடியாரை தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சியில் திளைக்கும் தொண்டர்கள்!

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒரே கட்சியை தமிழகத்தில் வேரூன்றி நிற்க போராடிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வழிகளை பின்பற்றி செவ்வனே ஆட்சி புரிபவர் எடப்பாடி கே. பழனிச்சாமி.

சாதாரண விவசாயின் குடும்பத்தில் பிறந்ததால், பாமர மக்களின் பிரச்சனையை எளிதாக புரிந்து கொண்டு அதற்காக பல நல்ல திட்டங்களை வகுத்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்துச் செல்கிறார் எடப்பாடியார்.

அப்படி இருக்கும் இந்த சூழலில் அதிமுக கட்சியில் பல பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கட்சி பிளவுபடாமல் இருப்பதற்கு தேவையான எல்லா முயற்சியையும் எடுத்து கட்சியை ஒருமைபடுத்துவதில் அதிக கவனமாய் இருக்கிறார்.

அதன் காரணமாகவே கட்சியில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனைகளை கூட சாதாரண தூசி போல் உதறிவிட்டு மீண்டும் கட்சியை வலிமைப்படுத்தி வருகிறார் எடப்பாடியார்.

அதற்கெல்லாம் கிடைத்த பலனாகவே துணை முதலமைச்சர் ஓபிஎஸ், எடப்பாடி கே. பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மீண்டும் அதிமுகவை தமிழகத்தில் மூன்றாவது முறையாக சிம்மாசனத்தில் அமர வைக்க வழி தோன்றியுள்ளது.

எனவே எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பாமர மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்து ஆரவாரத்துடன் சந்தோசத்தை தெறிக்க விடுகின்றனர்.

edapaadi

edapaadi

Continue Reading
To Top