Connect with us
Cinemapettai

Cinemapettai

yogi babu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்(க்) ஹீரோவாக யோகி பாபு! குசும்பான பேய் மாமா செகன்ட் லுக் போஸ்டர்

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்த்து பார்த்து ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக யோகி பாபு நடிப்பது தெரியவந்தது.

பேய் மாமா – இங்கிலீஷ்காரன், சார்லி சாப்ளின் இரண்டு பார்ட், வியாபாரி, என்னம்மா கண்ணு போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் சக்தி சிதம்பரம். தன் நக்கல், நய்யாண்டிக்கு பெயர் போனவர். இவர் இயக்கத்தில் தான் வடிவேலு ஹீரோவாக பேய் மாமா படத்தில் நடிப்பதாக இருந்தது.

peimama-yogibabu

peimama-yogibabu

இப்படத்தில் யோகி பாபு கமிட் ஆகி நடித்து முடித்துவிட்டாராம். முன்பே இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. கொரோனா பீதியில் மக்கள் இருக்க பேக் ட்ராப்பில் மாஸ்க் அணிந்துள்ளனர் சில ஆவிகள். மேலும் சமீபத்தில் பிரபலமான ‘இந்தி தெரியாது போடா’ என்கிற வாசகத்தை உல்ட்டா செய்து ‘எனக்கு இந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா’ என ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி இருந்தது.

பாக்கியா சினிமாஸ் சார்பில் விக்னேஷ் எல்லப்பன் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு பன்னீர் செல்வம், ராஜ் ஆர்யன் இசை, ப்ரீத்தம் எடிட்டிங், வசனங்களை ராஜகோபால் எழுதியுள்ளார். இப்படத்தின் அடுத்த போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

pei mama yogi babu

போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வரும் இப்படம் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆனா OTT ரிலீஸ் செல்லுமா அல்லது திரை அரங்க ரிலீசா என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

Continue Reading
To Top