Tamil Cinema News | சினிமா செய்திகள்
வடிவேலு பட வாய்ப்பை தட்டி பறித்த யோகிபாபு.. மத்திய அரசை வம்புக்கு இழுக்கும் பஸ்ட் லுக்
சில நாட்களாக ஹிந்தி தெரியாது போடா என்ற வார்த்தை இந்திய அளவில் பிரபலமானது.
பல பிரபலங்கள் டீ-ஷர்ட்டில் வார்த்தைகளை பதிவு செய்து வெளியிட்டனர், விளம்பரமும் படுத்தினர்.
இது ஒருபுறமிருக்க விஜய் சேதுபதி நேற்று வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு காமெடி கலந்த த்ரில்லர் ‘பேய் மாமா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது, இந்த போஸ்டரில் யோகி பாபுவின் சட்டையில் எனக்கு ஹிந்தி, தமிழ், தெலுங்கு எதுவுமே தெரியாது போடா என்று பதிவிட்டுள்ளனர்.
இது விளம்பரமாக எடுத்துக்கொண்டாலும், மத்திய அரசை தாக்கி பேசியுள்ளார் யோகிபாபு என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

peimama-yogibabu
அதாவது கொரோனா பாதிப்பை விளம்பரமாக மாற்றி உள்ள இந்த போஸ்டருக்கு வாழ்த்துக்கள் ஒரு புறம் குவிந்தும் வருகின்றன.
இதில் இன்னும் சுவாரசியம் என்னவென்றால், இந்த கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் யோகிபாபு இந்த வாய்ப்பை தட்டிப்பறித்த உள்ளார். அதிகமான சம்பளம் வடிவேலு கேட்டதால் இயக்குனர் யோகிபாபுவை தேர்வு செய்து விடலாம் என்று படத்தை முடித்து விட்டனர்.
