ஜாதியை பார்க்கும் சிவகார்த்திகேயன்.. வலையில் சிக்கிய அதிதி ஷங்கர்

மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார். அதிதியின் முதல் படமான விருமன் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அவர் இந்த படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார்.

சிவா, விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் வெள்ளித்திரைக்கு வரும் பொழுது எந்த பேக்கிரவுண்டும் இல்லாமல் நுழைந்தவர். ஆரம்பத்தில் காமெடி கேரக்டர்களில் நடித்தவர் இப்போது ஒரு மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார். இப்போது சிவகார்த்திகேயன் தனக்கென்று ஒரு வட்டாரத்தை உருவாக்கி விட்டார்.

Also Read: சமாதான தூது விட்ட சிவகார்த்திகேயன்.. ஒரே பாசப்போராட்டமா இருக்கே!

சிவா சமீபத்தில் மற்ற ப்ரொடக்சனில் படம் பண்ணுவதில்லை. தன்னுடைய SK ப்ரொடக்சன் தயாரிப்பில் தான் படம் பண்ணுகிறார். இல்லையென்றால் அவருடைய நண்பர்களிடம் பணம் கொடுத்து அவர்களை தயாரிக்க சொல்கிறார்.

சிவா தன்னுடைய நண்பர்கள் பலரை கோலிவுட்டிற்கு கொண்டு வந்து விட்டார். அவர்களுக்கு தான் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வருகிறார். என்னதான் நண்பர்களின் கனவுகளை நிறைவேற்றினாலும் இதுவும் ஒரு வகையான நெப்போட்டிசம் தான்.

Also Read: அடுத்த 300 கோடி வசூலுக்கு தயாரான சிவகார்த்திகேயன்.. உறுதியான SK21 மாஸ் கூட்டணி

சிவகார்த்திகேயன் இப்போது ஒரு பெரிய மாஸ் ஹீரோ ஆகிவிட்டார். அவருடைய வட்டாரத்தில் இருந்தவர்களையும் பெரிய இயக்குனர்களாக, தயாரிப்பாளர்களாக மாற்றி தனக்கான ஒரு பேக்ரவுண்டை உருவாக்கிவிட்டார் என்றே சொல்லலாம்.

இப்போது சிவாவை பற்றி பயில்வான் ரங்கநாதன் இன்னொரு அதிர்ச்சி தரும் தகவலை கூறியிருக்கிறார். அதாவது ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சிவா அதிதிக்கு வாய்ப்பு கொடுக்க காரணம், சிவகார்த்திகேயனும், இயக்குனர் சங்கரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதனால் தான் என்று பயில்வான் சமீபத்திய வீடியோவில் சொல்லியிருக்கிறார்.

Also Read: சிவகார்த்திகேயனுக்கு எதிராக கிளம்பிய நடிகைகள்.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீங்க

Next Story

- Advertisement -