Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பவன் கல்யாண் பல 100 முறைக்கு மேல் கேட்டு ரசித்த சிவகார்த்திகேயன் பாடல் எது தெரியுமா

சென்ற வாரம் தனது 49 வது பிறந்தநாளை கொண்டாடினார் பவன் கல்யாண்.

பவன் கல்யாண் தென்னிந்தியா முழுக்க பிரபலமான மனிதர். திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் மட்டுமன்றி அரசியல்வாதியும் ஆவார். இவர் தெலுங்கு நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் இளைய தம்பி ஆவார்.

ஜனா சேனா கட்சியின் நிறுவனர். கட்சியை தொடங்கிய பிறகு படத்தில் நடிப்பதில்லை என விலகியிருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை ( அமிதாப்பின் பிங்க் ரிமேக்) தெலுங்கிலும் ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்து வருகிறார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தனர். நம்ம சிவகார்த்திகேயன் பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பவன் கல்யாண் பதிவிட்ட ட்வீட் பலரது கவனத்தை பெற்றது.

“அன்பார்ந்த திரு சிவகார்த்திகேயன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துகள். உங்களின் ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எத்தனையோ முறை அதைக் கண்டு ரசித்திருக்கிறேன்” என பதிவிட்டார்.

இதற்கு பதில் தந்த சிவகார்த்திகேயன், “உங்கள் பதிலைக் காண மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது சார். ‘ஊதா கலர் ரிப்பன்’ பாடல் உங்களுக்கு பிடித்திருந்தது என அறிந்து மனம் மகிழ்ந்தேன். நேரம் ஒதுக்கி அன்பை வெளிப்படுத்தியமைக்கும், உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் மிகப்பெரிய நன்றி சார்” என பதில் ட்வீட் செய்துள்ளார்.

pawan kalyan tweet to sivakrthikeyan

பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இப்பாடல் பலரது பாவரிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Continue Reading
To Top