திடீரென மெய்யழகனை பாராட்டிய பவன் கல்யாண்.. திருப்பதி லட்டை வைத்து சகுனி ஆட்டம் ஆடிய கார்த்தி!

திருப்பதி லட்டு விவாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளன. இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் இதுவரை இவ்விவகாரத்தில் நடந்தவற்றைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. உலகின் பல பகுதிகளில் இருந்து சுவாமியை தரித்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில் வெங்கடேஸ்வருக்கு நைவேத்தியமாக வழங்கப்பட்டு வரும் லட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது திருமலா லட்டு ஸ்ரீவாரி லட்டு என அழைக்கப்படுகிறது.

இது தேவஸ்தானத்தின் கோயிலில் பொது எனும் கோவில் சமையலறையில் பட்டு பிரசாதம் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது புவியியல் சார் குறியீடு பெற்றுள்ளதால் இந்த லட்டை இங்கு மட்டும்தான் தயாரிக்க முடியும். இப்படி புகழ்பெற்ற இந்த லட்டில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்தாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளதுடன், முதல்வர் இதுபற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

இதற்கு ஜெகன் மோகன் தரப்பு இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், இந்த லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதை சமீபத்தில் ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்தாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். அதேபோல் திருப்பதி தேவஸ்தான செயலதிபாரி சியாமள ராவ் பிரசாத்தில் விலங்குகளின் கொழுப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இவ்விவகாரத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறி இதுபற்றி விசாரிக்க வேண்டுமென பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்விவகாரம் பற்றி மீடியாக்களிலும், யூடியூப்பிலும் பலரும் பேசி வரும் நிலையில், கடந்த 23 ஆம் தேதி மெய்யழகன் பட புரமோசன் நிகழ்ச்சியின்போது லட்டு பற்றி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து சர்ச்சையானது.

இதற்கு பதிலடி கொடுத்த ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண், ”நடிகர்களாக மரியாத அளிக்கிறேன்…ஆனால், சனாதன தர்மம் என வரும்போது,பேசுவதற்கு முன் 100 முறையோசிக்க வேண்டுமென” கண்டிப்புடன் அறிவுறுத்தியிருந்தார். உடனே, கார்த்தி தன் எக்ஸ்தள பக்கத்தில் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அடுத்து, சூர்யாவும் இதுகுறித்து பதிவிட்டிருந்தார்.

மெய்யழகன் படம் சத்யம் சுந்தரம் என்ற பெயரில் தெலுங்கில் ரிலீசாவதால் தனது பேச்சினால் மார்க்கெட்டும் பட வசூலும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கார்த்திக் மற்றும் சூர்யா இருவரும் மன்னிப்பு கேட்டதாக புளூ சட்டைமாறன் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கார்த்தியின் பதிவைப் பார்த்த துணை முதல்வர் பவன் கல்யாண், இவ்விசயத்தில் நீங்கள் காட்டிய மரியாதையைப் பாராட்டுகிறேன். இதுபோன்ற விசயங்களை கைலாளும்போது கவனமுடன் இருக்க வேண்டும். இதை எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்பினேன்.நாம் மதிக்கும் நமது கலாச்சாரம், ஆன்மிக விழுமியங்கள் சினிமா மூலம் தொடர்ந்து இம்மதிப்புகளை உயர்த்த பாடுபடுவோம். அர்ப்பணிப்பு மற்றும் திறமையுள்ள ஒரு நடிகராக உங்கள் மீது பராட்டுகள் கூறிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கார்த்தி, லட்டு விவகாரத்தில் பேசியது சர்ச்சையாகி அது பெரும் பூதாகரமான நிலையில், அவர் மெய்யழகன் ரிலீஸ் சமயத்தில், தெலுங்கில் தன் மார்க்கெட் கெட்டுவிட கூடாது என பவன் கல்யாண் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்ட நிலையில் இது கார்த்தியின் சந்தர்ப்பவாத அரசியல் எனவும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், லட்டு விவகாரம் பற்றி சுதாகர் மற்றும் கோபி இருவரும் இணைந்து பரிதாபங்கள் சேனலில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்த நிலையில், அது வைரலாகிக் கொண்டிருந்தபோது, அதை இருந்து நீக்கிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -spot_img

Trending News