வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

ஒரே முத்தக்காட்சிக்கு 23 டேக்கா.? குஷியில் பார்த்திபன், வேதனையில் தயாரிப்பாளர்!

இரவின் நிழல் திரைப்படம் பார்த்திபனுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த முக்கியமான வெற்றியாகும். உலக அரங்கில் இந்த சினிமாவை பாராட்டும் விதத்தில் கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளார் பார்த்திபன். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைத்தாலும் நினைத்த வசூலை பெற முடியவில்லை என்பது நிதர்சனம்.

பார்த்திபன் பல வித்தியாசமான சில முயற்சிகளை செய்தாலும் அவரது திரைப்படங்களில் பெண்களை கவரும் விதத்தில் சில விஷயங்களை வைக்க மாட்டார். அதுவும் இந்த படத்திற்கு பொருந்தும். காரணம் படத்தில் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் இருப்பது படம் வெளியாவதற்கு முன்பே தெரியவந்தது.

அதனை இந்த படத்தில் ஆடை இல்லாமல் நடித்த ரேகா நாயர் பவி டீச்சர் ஊர் முழுக்க தண்டோரா போட்டு சொன்னதே இதற்கு காரணம். பொதுவாக ஆடையில்லாமல் நடிக்கும்போது அந்த கதாநாயகியை சுற்றி ஒன்றோ இரண்டோ பேர்தான் இருப்பார்கள்.

ஆனால் இந்த படத்தில் பவி டீச்சர் நடிக்கும் பொழுது அவருடன் 350க்கும் மேற்பட்ட நபர்கள் இருந்தார்கள் என்பது உண்மை. இந்த காட்சியை இருபத்தி மூன்று டேக்குகள் எடுத்துள்ளனர். பார்த்திபன் அவர்கள் முத்தக்காட்சியை 23 தடவை கொடுத்து கடைசியாக ஓகே செய்துள்ளார். இந்த செய்தியை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் யூட்யூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இது படத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக தோன்றினாலும் படத்தின் வசூலை பாதித்துள்ளது. குறிப்பாக பெண்கள் யாரும் படத்தை விரும்பாதது தான் காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது. இதனால் கலைப்புலி தாணு அவர்கள் வருத்தத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

என்னதான் தமிழ்சினிமாவில் எப்படிப்பட்ட காட்சிகள் வைத்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் மக்கள். ஆனால் ஆடை இல்லாத காட்சிகள், முத்தக் காட்சிகள் போன்றவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு எடுத்துக்காட்டு உலகநாயகன் கமலஹாசன் பல படங்கள் வெற்றி அடையாமல் போனதற்கு இது ஒரு காரணம். இதில் பார்த்திபனும் அடங்குவார்.

- Advertisement -

Trending News