Connect with us
Cinemapettai

Cinemapettai

பாவக்கதைகள் படத்தில் மிரட்டிய நரிக்குட்டி- இவரும் விஜய் டிவி பிரபலம் தானுங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாவக்கதைகள் படத்தில் மிரட்டிய நரிக்குட்டி- இவரும் விஜய் டிவி பிரபலம் தானுங்க

டிசம்பர் 18ல் நெட்பிளிக்ஸில் நேரடி ரிலீஸ் ஆனது தமிழ் ஆந்தாலஜி தொகுப்பு பாவகக்கதைகள். நான்கு படங்களை சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ளனர்.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள பகுதி “லவ் பண்ணா விட்டுரணும்”. அஞ்சலி (டபிள் ஆக்ஷன்) மற்றும் கல்கி கோச்செலின் மெயின் ரோலில் நடித்த படம். கிராமத்தில் அப்பா கதாபாத்திரத்தில் மெயின் வில்லன் வீரசிம்மன் வேடத்தில் பதம் குமார் நடித்திருப்பார். அவரின் மெயின் கைத்தடி வேடத்தில் நரிக்குட்டி ரோலில் ஜாபர் சித்திக் நடித்திருப்பார்.

நரிக்குட்டியின் உடல் அசைவு , பேச்சு வழக்கு, கெட்ட வார்த்தைகள் பேசுவது, லெஸ்பியன் என்பதை ESPN என பேசுவது என்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். தமிழ் சினிமாவுக்கு ஒரு காமெடி கலந்த வில்லன் வேடத்திற்கு புதிதாக ஒருவர் கிடைத்துவிட்டதாக அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

இந்த ஜாபர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா 2 வில் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி போட்டி வரை வந்தவர். மிகவும் இளம் வயது கண்டெஸ்டண்ட் அந்த சமயத்தில்.

jaffer UYAP 2

இந்த 8 வருடங்களில் தாடி மீசையெல்லாம் வைத்து, வளர்த்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் ஜாபர். டான்ஸ் மாஸ்டர் ஆகவேண்டும் என்பதே இவரின் கனவு மற்றும் லட்சியம், எனினும் விக்கியின் இந்த படம் வாயிலாக நடிகராக ஒரு ரவுண்ட் கட்டாயம் வருவார்.

paavkadhaigal

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top