Tamil Cinema News | சினிமா செய்திகள்
பட்டாஸ் படம் வரும் ஜனவரி 15 பொங்கலன்று வெளியாவது ஏன்? ஆச்சரிய தகவல்
தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வரும் ஜனவரி 15 பொங்கலன்று வெளியாக உள்ளது அந்த படத்திற்கு தணிக்கை சான்று அலுவலகம் யூ சான்றிதழ் அளித்துள்ளது.
முன்னதாக பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்பாகவே பொங்கல் அன்று பட்டாஸ் பட்டாசை கிளப்பப் போகிறது.
ரஜினியின் தர்பாரில் சிக்கி காணாமல் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில் எந்த படமும் பொங்கல் சமயமான இப்போது வெளியாகவில்லை. இதுவரை ரஜினி எடுத்த படங்களிலேயே மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு தர்பார் படம் உள்ளாகி அதையும் மீறி வெற்றி பெற்று வருகிறது. தர்பார் படம் தேவையான வசூலை அள்ளிவிட்டது. இதனால் அடுத்த வரம் ரிலீஸ் பண்ணலாம் என முடிவு எடுத்து உள்ளனர்.
இந்த நிலையில்தான் ரஜினியின் மருமகனான தனுஷ் தனது பட்டாஸ் திரைப்படத்தை பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்துள்ளார். ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சினேகா, நவீன் சந்திரா, மஹ்ரீன் பிர்ஸாடா, நாசர் , முனீஷ்காந்த், சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார்கள்.
