Connect with us
Cinemapettai

Cinemapettai

இணையதளத்தில் லீக்கான பட்டாஸ் படத்தின் கதை.. மீண்டும் அசுரனாகும் தனுஷ்

pattas

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையதளத்தில் லீக்கான பட்டாஸ் படத்தின் கதை.. மீண்டும் அசுரனாகும் தனுஷ்

தனுஷ் நடிப்பில் நாளை வெளிவர காத்திருக்கும் பட்டாஸ் படத்தின் கதைக்களம் எப்படி இருக்குமென்றால் நமது பாரம்பரியமான தற்காப்பு கலையை மையமாக வைத்து இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அதிலும் இரண்டு வேடங்களில் நடிக்கும் தனுஷ் அப்பா கேரக்டரில் நடிக்கும் தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார். மகன் கேரக்டரில் வரும் தனுஷ் சென்னை லோக்கலாக புள்ளிங்கோ பசங்களாக வலம் வருகிறார்.

https://twitter.com/Mr_F_views/status/1214514363161182208?s=20

அப்பா தனுஷ் தற்காப்புக் கலையை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது போன்றும் அவரை கொன்று விடுகிறார்கள், கொன்றவர்களை பழி தீர்க்கும் படலமாக மகன் தனுஷ் களமிறங்கி விளையாடுகிறார்.

இன்னும் ஒரு காட்சியில் சிநேகா சிறைச்சாலையில் இருப்பது போன்ற வீடியோவில் தெரிகிறது. எதிர்நீச்சல், கொடி ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இரண்டாவது முறையாக தனுஷை வைத்து பட்டாஸ் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடி படத்திலும் அண்ணனை கொண்டவர்களைப் பழி தீர்க்கும் தம்பியாக உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இங்கே தந்தையை கொன்றவர்களை பழி தீர்க்கப் போகிறார்.

இப்படத்தில் வரும் ‘சில் ப்ரோ’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஒரு சாயல் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு கதையோடு ஒத்துப்போவது போன்று இருக்கிறது. எப்படியிருந்தாலும் தனுஷ் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் பெரும் கொண்டாட்டம்தான். பட்டாஸ் வெடிக்குமா வெடிக்காதா என்பதை நாளை பார்க்கலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top