fbpx
Connect with us

Cinemapettai

பட்டாஸ்.. தனுஷ் ரசிகர்ளுக்கு இன்று செம்ம ட்ரீட் இருக்கு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பட்டாஸ்.. தனுஷ் ரசிகர்ளுக்கு இன்று செம்ம ட்ரீட் இருக்கு

தனுஷ் நடித்த அசுரன் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் சுமாராகவே போனது.

இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பட்டாஸ் என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ் உடன் சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரகாஷ்பாபு படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே தனுஷ் மற்றும் துரை செந்தில் குமார் கொடி படத்தில் இணைந்து இருந்தனர். அந்த படம் சிறப்பாக ஓடியது.அதனால் பட்டாஸ் பட்டாசை கிளப்பும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பட்டாஸ் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் கூடிய மோஷன் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு சத்யஜோதிபிலிம்ஸ் வெளியிடுகிறது இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top