நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், சல்மான் கான், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக வெளியான பதான் திரைப்படம் சக்கைபோடு போட்டு வருகிறது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படத்தில் ஆக்ஷன், மாஸ் காட்சிகள், காமெடி, காதல், நாட்டுப்பற்று, கவர்ச்சி என அனைத்தும் கலந்த கலவை இப்படத்தில் உள்ளது.
இந்திய அரசு நடத்தும் ரகசிய ஆராய்ச்சி குழுவின் முக்கிய வீரராக இருக்கும் ஷாருக்கான், பயோ வார் எனப்படும் சின்னம்மை நோயை நாடு முழுவதும் பரப்ப அண்டை நாட்டுடன் இணைந்து, வில்லன் ஜான் அப்ரஹாம் செய்யும் முயற்சியை அழிக்கும் விதமாக ஷாருக்கான் களமிறங்குகிறார். நாட்டையும், நாட்டுமக்களையும் இந்த சதியிலிருந்து ஷாருக்கான் காப்பாற்றுகிறாரா, இல்லையா என்பது தான் இப்படத்தின் மீதியுள்ள கதையாகும்.
Also Read: ஷாருக்கான் கேட்டால் லிமிட்டே கிடையாது.. நன்றியை வேற லெவலில் காட்டும் திருமணம் முடிந்த தீபிகா
கடந்த 4 ஆண்டுகள் தொடர் பட தோல்வியால் ஷாருக்கான் எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்தார். ரசிகர்களின் எதிர்ப்பார்பை தற்போது ஷாருக்கான் பூர்த்தி செய்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனிடையே இப்படத்தின் வசூல் ஹிந்தி சினிமாவின் வரலாற்றையே மாற்றியுள்ளது. பதான் திரைப்படம் ரிலீஸான 12 நாட்களில் பாகுபலி 2, கேஜிஎப் 2 உள்ளிட்ட படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
ராஜமௌலியின் பாகுபலி 2 படம் இந்திய அளவில் 400 கோடி வசூலை எடுக்க 15 நாட்கள் ஆனது. அதை போலவே நடிகர் யாஷின் கேஜிஎப் 2 படம் 400 கோடி வசூலை எடுக்க 23 நாட்களானது. ஆனால் பதான் திரைப்படம் 12 நாட்களில் மட்டும் இந்திய அளவில் 500 கோடி வசூலை எடுத்து மேற்கண்ட படங்களின் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் இப்படம் ரிலீசான இரண்டாவது ஞாயிற்று கிழமையில் மட்டும் 28.50 கோடி வசூலை உலகளவில் படைத்துள்ளது.
Also Read: 4 வருடங்களுக்குப் பிறகு பட்டையை கிளப்பிய ஷாருக்கான்.. முதல் நாள் வசூலை கேட்டா சும்மா தல சுத்துதில்ல
மற்ற நாடுகளில் 300 கோடி வசூலையும் பெற்று மொத்தம் 832 கோடி வரை உலகளவில் இப்படம் வசூல் படைத்துள்ளது. இதுவே ஹிந்தி சினிமாவில், உலகளவில் அதிக வசூல் எடுத்த முதல் திரைப்படமாக ஷாருக்கானின் பதான் வராலாற்று சாதனையை படைத்துள்ளது. ஆனால் பதான் பட சாதனையை முறியடிக்க விஜய்யின் லியோ படம் தற்போது களமிறங்கியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கவுள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஆரம்பித்துள்ள நிலையில், படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூலாகவே 300 கோடிக்கு மேல் லியோ படம் வாரி குவித்துள்ளது. அப்போது படம் ரிலீசானால் கட்டாயம் பதான் படம் 12 நாட்கள் செய்த சாதனையை, விஜய்யின் லியோ படம் 10 நாட்களில் செய்யக்கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
Also Read: தீபாவளிக்கு முன்பே வெளியாகும் லியோ.. பிரம்மாண்ட வசூலுக்கு பிளான் போடும் டீம்