உலகளவில் அதிக வசூல் செய்த 4 இந்திய படங்கள்.. அசைக்க முடியாத கேஜிஎஃப்-பை தொட போகும் பதான்

திரைப்படங்களை பொருத்தமட்டிலும் ஒரு படத்தை இயக்கும்போதே அதை உலக அளவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவுடன் தான் இயக்குவார்கள். ஆனால் ஒரு சில படங்களோ மிகப்பெரிய ரீச்சை அடைந்து நன்றாக பேசப்பட்டால் அடுத்த சில வாரங்களிலேயே டப் செய்யப்பட்டு உலக அளவில் ரிலீஸ் செய்யப்படும். இதுவரை நான்கு இந்திய திரைப்படங்கள் உலக அளவில் கோடி கணக்கில் வசூல் செய்திருக்கின்றன.

கே ஜி எஃப்: ஹோமபல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கே ஜி எஃப். இந்த படம் கோலார் தங்க வயலில் வேலை செய்த தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தியது. படத்தின் முதல் பாகம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியடைய, இரண்டாம் பாகத்தை உலக அளவில் ரிலீஸ் செய்தனர் படக் குழுவினர். 100 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டது. கன்னட சினிமா வரலாற்றிலேயே இதுதான் உயர்ந்த பட்ஜெட் படம். இந்த படம் 546 கோடி வரை வசூல் செய்தது.

Also Read: பாலிவுட்டை தூக்கி நிறுத்தினாரா ஷாருக்கான்.? இணையத்தில் கொண்டாடும் பதான் பட ட்விட்டர் விமர்சனம்

பதான்: இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், டிம்பிள் கபாடியா ஆகியோரது நடிப்பில் உருவான பதான் திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆனது. 225 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 542 கோடியை எட்டிவிட்டது. இந்தப் படம் இன்னும் சில நாட்களில் கே ஜி எஃப் திரைப்படத்தின் வசூலை முறியடிக்க இருக்கிறது.

பாகுபலி 2: இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் , சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் வெளியான பாகுபலி முதல் பாகத்தின் விறுவிறுப்பு தான் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உலக அளவில் வெற்றியடைய செய்தது. பாகுபலி இரண்டாம் பாகம் மட்டுமே 540 கோடி வசூலித்தது.

Also Read: ஷாருக்கான் மகளை வளைத்துப் போட்ட சூப்பர் ஸ்டாரின் மகன்.. பின்னணியில் இருக்கும் காரணம்

ஆர் ஆர்ஆர் : இன்று உலக அளவில் இந்திய சினிமாவை தலை நிமிர செய்திருக்கும் திரைப்படம் ராஜ மௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம். இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் இணைந்து நடித்திருந்தார்கள். இந்தப் படம் சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய கதையை மையமாகக் கொண்டது. ஆர் ஆர் ஆர் 500 கோடி வரை வசூல் செய்தது.

இந்த நான்கு படங்களில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்திற்குள் 542 கோடி வசூல் செய்திருக்கிறது என்றால், கண்டிப்பாக இனிவரும் நாட்களில் இந்த வசூலின் அளவு அதிகமாகும். ரிலீசுக்கு முன்பு நிறைய எதிர்மறை விமர்சனங்களை பெற்ற இந்த படம் இப்போது சாதனை செய்து கொண்டிருக்கிறது.

Also Read: ஷாருக்கான் கேட்டால் லிமிட்டே கிடையாது.. நன்றியை வேற லெவலில் காட்டும் திருமணம் முடிந்த தீபிகா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்