Photos | புகைப்படங்கள்
பசுபதி மகளை பார்த்துள்ளீர்களா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுக்கும் வில்லனாக நடித்த ஒரே நடிகர் பசுபதி. இவரது வில்லத்தனமான நடிப்பு தற்போது வரை தமிழ் ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான வில்லன் கூட நடிக்க முடியாது. அந்த அளவிற்கு தத்ரூபமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பசுபதியை காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இவரது நடிப்பில் வெளியாகாத படங்களே கிடையாது. அந்த அளவிற்கு அனைத்து நடிகர்களுடன் வில்லனாக நடித்துள்ளார்.
அதிலும் இவரது நடிப்பில் வெளியான பட்டாசு பாலு, கஜபதி மற்றும் நாராயணன் போன்ற கதாபாத்திரம் இன்று வரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்து உள்ளன. வில்லனாக கொடிகட்டி பறந்த பசுபதி சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

pasupathy masilamani daughter
அப்படி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் அண்ணாச்சி என்னும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றார். நாசர் நட்பின் மூலம் தான் இவர் சினிமா துறைக்கு அறிமுகமானார்.
இந்நிலையில் பசுபதி சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு ஒரு மகளும் உள்ளது. தற்போதைய இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
