Connect with us

படமாகிறது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை.. இயக்குவது யார் தெரியுமா?

muthuramalingam-cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

படமாகிறது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை.. இயக்குவது யார் தெரியுமா?

சமீபகாலமாக பிரபலமானவர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பது ட்ரெண்டாகி வருகிறது. அந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர்.

விஜயகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த ஊமை விழிகள் படத்தின் இயக்குனர் அரவிந்த் ராஜ் பல வருடங்கள் கழித்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை பஷீர் என்பவருடன் சேர்ந்து ஏ எம் சவுத்ரி தயாரிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முக அமைப்பை அப்படியே பெற்ற பஷீர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். சொந்தமாக படம் தயாரித்து நடிக்கவும் முடிவெடுத்துள்ளார்.

இந்த படத்திற்கான மற்ற நடிகர்கள் நடிகைகளின் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக தளர்த்தப்பட்ட பின் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன.

இந்தப்படம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான ‘முடிசூடா மன்னன் பசும்பொன் தேவர்’ என்பதன் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

pasumpon-devar-movie-poster

pasumpon-devar-movie-poster

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top