18 வருடமாக கணவனை தொலைத்த பார்த்திபன் பட நடிகை.. ஜோதிடத்தை நம்ப இப்படி ஒரு காரணமா.?

Parthiban: பார்த்திபன் பட நடிகை ஒருவர் ஜோதிடத்தை நம்புவதற்காக தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். இது மிகவும் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. பொதுவாக ஜோதிடத்தை நம்புபவர்கள் மற்றும் நம்பாதவர்கள் என இரண்டு தரப்பினர் உள்ளனர்.

இவர்களை ஒரு சேர்த்து ஜீ தமிழில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் விவாதிக்க வைத்தனர். இதில் சில ஜோதிடர்களே பங்கு பெற்றிருந்தனர். மேலும் ஜோதிடத்தை நம்பாதவர்களுக்கும் இவர்கள் ராசியை வைத்து பலன் கூறி வந்தனர்.

இந்நிலையில் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் ஏன் ஜோதிடத்தை நம்புகிறேன் என்று தன்னுடைய வாழ்வில் நடந்த விஷயங்களை கூறினார். அதாவது 19 வயதிலேயே ரேகா நாயருக்க திருமணம் நடந்துள்ளது.

பார்த்திபன் பட நடிகையின் கடந்த கால வாழ்க்கை

அந்தச் சமயத்தில் அவர் வீட்டின் வழியே வந்த கோடாங்கி ஒருவர் இந்த வண்டிக்கு ஏற்ற சக்கரம் இது இல்லை என்று கூறினாராம். அப்போது அவருக்கு என்ன சொல்கிறார் என்று புரியாத நிலையில், பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் வந்து ஜாக்கிரதையாக இருந்து கொள் என்று சொன்னாராம்.

அதன் பிறகு நான்கு வருடங்களில் வேலைக்குச் சென்ற ரேகா நாயரின் கணவர் திரும்பி வரவே இல்லையாம். அப்போது ரேகா நாயர் கோடங்கி சொன்னவுடனே ஏதாவது ஜோசியரை பார்த்திருக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்ததாம்.

எங்கு பார்த்தாலும் கணவரை தேடி கடைசியில் கிடைக்காத நிலையில் ரேகாவுக்கு நடிக்க வாய்ப்பு வந்ததால் சென்னை வந்து விட்டாராம். அப்போது தொலைக்காட்சிகளில் பல ஜோசியரை விமர்சித்து கேள்விகள் கேட்டிருக்கிறார். அப்போது ரேகா நாயருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் என்றும் ஒரு ஜோசியர் சொன்னாராம்.

அதில் அப்போது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், கடந்த மூன்று வருடங்களுக்கு முன் எனக்கு இரண்டாம் திருமணம் நடந்ததாக ரேகா நாயர் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கூறி இருந்தார். ரேகாவின் கடந்த கால வாழ்க்கை இப்படி இருந்ததா என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது.

துணிச்சலான நடிகை ரேகா நாயர்

- Advertisement -spot_img

Trending News