‘பூலோகம்’ வசூலை முந்தியதா ‘பசங்க 2’?

pasanga-2-bhoolohamகடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸான ‘பசங்க 2’ திரைப்படம் முதல் காட்சியில் வசூலில் மந்தமாக இருந்தாலும் அடுத்தடுத்து வந்த விமர்சனங்கள் மற்றும் விடுமுறை நாட்கள் காரணமாக வசூலில் மற்ற படங்களை மிஞ்சிவிட்டது. முதல் இரண்டு நாட்களில் நல்ல வசூல் செய்த ஜெயம் ரவியின் பூலோகம் படத்தின் வசூலை தற்போது ‘பசங்க 2’ நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சென்னையில் ‘பசங்க 2’ திரைப்படம் முதல் வாரத்தில் வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் கிட்டத்தட்ட இருமடங்காக அதாவது ரூ.90 லட்சம் வசூல் செய்தது. ஆனால் அதே நேரத்தில் ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ முதல் வாரத்தில் ரூ.1.50 கோடி வசூல் செய்தது. ஆனால் இரண்டாவது வாரத்தில் இந்த படம் வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே வசூல் செய்தது.

கிட்டத்தட்ட இரண்டு படங்களும் ஒரே அளவு வசூல் செய்திருந்தாலும் பட்ஜெட்டை வைத்து கணக்கிட்டு பார்த்தால் பசங்க 2 படத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் பொங்கல் தினம் வரை பசங்க 2′ படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

comments