pasanga 2 reviewகடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகி தொடர்ந்து 3வது வாரமாக நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் தரமான படம் ‘பசங்க 2. குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இந்த படத்திற்கு தற்போது சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பார்க்க வரும் 10வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்றும் அவர்கள் இந்த படத்தை தனியாகவோ அல்லது பெற்றோர்களுடனோ வந்தால் இலவசமாக பார்க்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை இன்று முதல் கோவை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்னாற்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு மட்டும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, அமலாபால், பிந்துமாதவி, முனீஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாண்டியராஜ் இயக்கியுள்ளார். கரோல் அரோலி இசையமைத்த இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது