Tamil Cinema News | சினிமா செய்திகள்
படங்களை ஒப்புக்கொள்வதில் பார்வதி மேனன் கையாளும் புது யுத்தி..

நடிகை பார்வதி மேனன் கதைகளை தேர்வு செய்யும் விதம் குறித்த ஒரு சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பார்வதி மேனன் மலையாளத்தில் 2006ல் அவுட் ஆப் சிலபஸ் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால், அப்படத்தை தொடர்ந்து, நோட் புக் என்ற படம் தான் பார்வதியை நடிகையாக அடையாளம் காட்டியது. மலையாளத்தில் இருந்து கன்னட திரையில் கால் பதித்த பார்வதிக்கு அங்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அதை தொடர்ந்து, 2008ம் ஆண்டு வெளியான பூ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார். அப்படத்தில் பார்வதியின் நடிப்பு அனைவராலும் பாராட்டு பெற்றது. பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார். தொடர்ந்து, தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம் சினிமாவில் நடித்து வருகிறார் பார்வதி.
மற்ற நடிகைகளை விட பார்வதி சற்று வித்தியாசமானவர். மனதில் பட்டதை யாருக்காகவும் மறைக்க மட்டார். இதனால், சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைக்குள் சிக்கி வருகிறார். அதுமட்டுமல்லாது, திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் போக்குக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் பார்வதி. சமீபத்தில், கசபா படத்தில் பெண்ணை இழிவுபடுத்தும் காட்சியில் நடித்த மம்முட்டி இக்காட்சியை தவிர்த்து இருக்கலாம் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்புக்காக பல முயற்சிகளை எடுத்தும் வருகிறார்.
இந்நிலையில், பார்வதி கதையை கேட்டு பிடித்து இருந்தாலும், நாயகன் ஓகே என்றால் மட்டுமே அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவிப்பாராம். அதுவே பிடிக்காத நாயகர்கள் என்றால் கண்டிப்பாக முடியாது என மறுத்து விடுகிறார். தொடர்ந்து, நீங்கள் தான் செய்ய வேண்டும் என முரண்டு பிடிக்கும் தயாரிப்பாளரிடம் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு தெறிக்க விடுவதாக தகவல்கள் பரவி வருகிறது.
