திடீரென்று காலமான பருத்திவீரன் பட நடிகர்.. மறக்க முடியாத, கலகலப்பான 5 படங்கள்

அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் நடித்தவர், சினிமாவில் இதுவரை 140 படங்களுக்கு மேல் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானார். இவர் சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 70 வயதில் திடீரென்று காலமாகி உள்ளார். பருத்திவீரன் படத்தில் பொணந்திண்ணி ஆக நடித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் நடிகர் செவ்வாழை ராசு.

இவர் திடீரென்று இன்று உயிரிழந்திருப்பது திரை பிரபலங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. இவர் காமெடியில் கலக்கிய 5 கலகலப்பான படங்களை பற்றி தான் சோசியல் மீடியாவில் வைரலாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

கிழக்குச் சீமையிலே: 1993 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கு சீமையிலே என்ற படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை செவ்வாழை ராசு துவங்கியிருக்கிறார். இதில் பெரிய மீசையுடன் பஞ்சாயத்து பண்ணக்கூடிய பெரிய மனுஷர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

Also Read: மரணத்தில் முடிந்த 5 காதல் படங்கள்.. தாக்கத்தை ஏற்படுத்திய பருத்திவீரன்

பருத்திவீரன்: கார்த்தி தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தில் தான் பொணந்திண்ணி என்ற கதாபாத்திரத்தில் செவ்வாழை ராசு நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதாவது பருத்திவீரனின் சித்தப்பு சரவணன், செவ்வாழை ராசுவை ‘பொணந்திண்ணி’ என அழைப்பார்.

உடனே அவர், இப்படி எல்லாம் சொல்லாத என அட்வைஸ் பண்ணுவார் அதை சுத்தமாகவே காது கொடுத்து கேட்காமல் பருத்திவீரன், குட்டிசாக்கு என்ற சிறுவனை அழைத்து மண்டையிலே நங்கு நங்கு என்று கொட்ட வைத்திருப்பார். அதனால் மண்டை பணியாரம் போல் வீங்கி விடும். அதன்பின் செவ்வாழை ராசு சிறுபிள்ளை போல் அழுது கொண்டே சென்ற காட்சி பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

மைனா: பிரபு சாலமன் இயக்கத்தில் 2019 வெளியான விதார்த் மற்றும் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் கதாநாயகன் சுருளியின் தந்தை மாயி என்ற கதாபாத்திரத்தில் செவ்வாழை ராசு நடித்திருப்பார். இந்தப் படத்தில் மாயி சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒருவர் கையை நீட்டி, உன்னுடைய மகன் கையை கடித்து விட்டார் என காட்ட, உடனே அவர் கையில் இருக்கும் பளபளப்பான தங்க மோதிரத்தை கழட்டிக் கொண்டு விட்டு விடும் காமெடியான தந்தை கதாபாத்திரத்தில் செவ்வாழை ராசு கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார்.

Also Read: இரண்டே வாரத்தில் உயிரை விட்ட சித்தப்பு.. கதறும் 4 மகள்கள், மகாநதி சீரியலில் நடந்த எதிர்பார்த்த ட்விஸ்ட்

கந்தசாமி: 2009 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான கந்தசாமி படத்தில் ஏழை விவசாயிகளிடம் நிலத்தை அபகரிக்க கூடிய அரசியல்வாதியாக செவ்வாழை ராசு நடித்திருப்பார். இதற்காக அவர் கருப்பு பணத்தை மூட்டை மூட்டையாக பணத்தை கொட்டிக் கொடுக்கும் போது சிபிஐ அதிகாரியான விக்ரம் அந்த இடத்தை சூழ்ந்ததும் ,செவ்வாழை ராசு தலை தெறிக்க ஓடும் பார்ப்பதற்கே சிரிப்பூட்டும் வகையில் இருக்கும். இந்த படத்தில் இவர் காமெடி மட்டுமல்ல டிப் டாப் ஆனா அரசியல்வாதியாக நடித்து அசத்தியிருப்பார்.

வேலாயுதம்: 2011 ஆம் ஆண்டு அதிரடி  நகைச்சுவை திரைப்படமாக வெளியான வேலாயுதம் படத்தில் விஜய், ஹன்சிகா, ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர்களுடன் செவ்வாழை ராசுவும் கிராமத்து வாசியாக காமெடியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார்.

Also Read: பணத்தாசையால் மொத்தத்தையும் இழந்த காமெடி நடிகர்.. அமீர், பாலாவால் கிடைத்த வாழ்க்கையை பறிகொடுத்த சோகம்

இவ்வாறு இந்த 5 படங்களில் தான் செவ்வாழை ராசு காமெடியில் கலக்கி உள்ளனர். அதிலும் இவர் பணத்திற்காக சினிமாவில் நடிக்கவில்லை. பொழுதுபோக்கிற்காகவே நடித்திருக்கிறார். அது மட்டுமல்ல கோடி ரூபாய் கொடுத்தாலும் நெகட்டிவ் ரோலில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையில் இறக்கும் வரை உறுதியுடன் இருந்தவர் செவ்வாழை ராசு என அவரது நண்பர்கள் தங்களது உருக்கமான இரங்கல் செய்தியில் பதிவிட்டுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்