Politics | அரசியல்
தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ள சின்னம் என்ன தெரியுமா ?
பாராளுமன்ற தேர்தலில் போட்டியுட உள்ள கமலின் கட்சிக்கு சின்னம் “பேட்டரி டார்ச் ” முடிவானது.
Published on

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, “பேட்டரி டார்ச் லைட்” சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது தேர்தல் ஆணையம் .

MNM
இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது.
தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே அவரின் நோக்கம் . தமிழக அரசியலில் ஒளி ஏற்றும் விதமாக அவருக்கு தற்பொழுது டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவரின் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
