ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை அணி வீரர்களைத் தேர்வு செய்ய தேர்வுக்குழு மும்பையி்ல்கூடுகிறது.

ஜூன் 1-ந்தேதி இங்கிலாந்தில் ஐ.சி.சி.சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இதில், தரவரிசையில் முதல 8 இடங்களில் இருக்கும்அணிகள் பங்கேற்கின்றன.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. மேற்கிந்தியத்தீவுகள் அணி 9-து இடத்தில் இருப்பதால், அந்தஅணி தகுதியிழந்தது.

இதில் ஜூன் 4-ந்தேதி நடக்கும் போட்டியில், விராத் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 8-ந்தேதி நடக்கும் 2-வது ஆட்டத்தில் இலங்கையையும், 11-ந்தேதி 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்த வருவாயை பகிர்வை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்து(பி.சி.சி.ஐ.) ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதுகுறித்து பரிசீலிப்போம் எனத் தெரிவித்தது. அணியை அறிவிக்கும் காலக்கெடுமுடிந்தும் அறிவிக்காமல் பி.சி.சி.ஐ. அதிகாரிகள் இருந்தனர்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவினர், உடனடியாக இந்திய அணி பங்கேற்பை உறுதி செய்து, வீரர்கள் பட்டியை அனுப்பிவைக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பி.சி.சி.ஐ. அமைப்பின் சிறப்பு பொதுக்குழு இன்று டெல்லியில் கூடி விவாதித்தது. அதன் பின் ஐ.பி.எல். நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜீவ் சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், “ இந்த சிறப்பு பொதுக்குழுவின் முடிவில் இந்திய அணி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை அணிதேர்வுக்குழு கூடி, வீரர்களைத் தேர்வு செய்யும்” எனத் தெரிவித்தார்.