ஓய்வை அறிவித்த அடுத்த நாளே ஐபிஎல் டீம்மில் இணைந்த பார்திவ் படேல்

இந்திய டீம்மில் சுட்டி குழைந்தையாக இருந்த பொழுதே அறிமுகமானவர் பார்திவ். 17 வயதில் டீம்மில் இணைந்தார். தற்பொழுது இவருக்கு 35 வயதாகிறது. 25 டெஸ்ட் போட்டி, 38 ஒருநாள், மற்றும் 2 டி20 போட்டிகளிலும் இந்தியாவிற்காக ஆடியுள்ளார் பார்திவ். வீரராக 18 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி தனது ஓய்வை நேற்று அறிவித்தார்.

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் 31.13 சராசரியுடன் 934 ரன் குவித்தவர். இவர் குஜராத் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் கலக்கியவர். இதுவரை 194 உள்ளூர் முதல் தரப்போட்டிகளில் பங்கேற்று 67 அரைசதம், 27 சதங்களுடன் 11,000 ரன்களைக் கடந்துள்ளார். கேப்டானாகவும் அசத்தியவர். ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ், கொச்சி டஸ்கர்ஸ், டெக்கான் சார்ஜெர்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

இந்த சீசன் RCB டீம்மில் படிக்கல் சிறப்பாக விளையாட, ஏ பி விக்கெட் கீப்பிங் செய்ய இவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. சென்னை மற்றும்  மும்பை டீம்முடன் பார்த்திவுக்கு அதிக பிணைப்பு உண்டு. மும்பைக்கு மூன்று சீசன் விளையாடி இரண்டு முறை கோப்பையை (2015 , 2017) ஜெயித்துள்ளார்.

இந்நிலையில் இவர் மும்பை டீம்மில் திறமை சாரணர் (Talent Scout) ஆக இணைந்துள்ளார். திறமை வாய்ந்த வீரர்கள் இருப்பின், அவர்களை தேடி பிடித்து அணி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் வேலை தான் இனி பார்க்கப்போகிறார். இப்படி தான் ஜான் ரய்ட் இருந்த காலகட்டத்தில் மும்பைக்கு பும்ரா கிடைத்தார்.

டீம் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி பேசிய பொழுது, ” பார்திவ் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் எங்கள் டீமுக்கு வீரராக நல்ல பங்களிப்பை தந்தார். அவருக்கு உள்ள கிரிக்கெட் அறிவிற்கு, வீரர்களை தேடும் பணியை சிறப்பாக செய்வார் என்பதில் அதீத நம்பிக்கை உள்ளது. மேலும் அவருக்கு மும்பை டீம்மின் சித்தாந்தம் தெரியும், நாங்கள் என்ன உருவாக்க விரும்புகிறோம் என்பதை புரிந்தவர்.” என சொல்லியுள்ளார்.

MI