மிரள வைக்கும் பார்த்திபன் ஒத்த செருப்பு 7 – திரைவிமர்சனம்

பார்த்திபன் அவர்கள் இயக்கி, நடித்து, தயாரித்தும் உள்ள படமே OS 7 . பல நாட்களாகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய வண்ணமே இருந்தது. இப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கதை – போலீஸ் விசாரணை தான் கதைக்களம். அந்த ஒரு ரூமில் தான் மொத்த படமும் நடக்கிறது. மாசிலிமணி என்ற செக்யூரிட்டி ரோலில் அப்பாவித்தனமாக பரிதாபமே நிறைந்த தோரணையில் தொடங்குகிறது பார்த்திபனுடன் படம். பக்காவாக சாட்சிகள் கிடையாது, அவனே குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தான் கேஸ் முடியும் என்ற சூழலில் போலீசுக்கு அதிக நெருக்கடியான சூழலே.

கொலை செய்தேன், இல்லை செய்யவில்லை என்று சொல்லமால் மூன்றாவது கோணத்தில் நான் லீனியர் ஸ்டைலில் திரைக்கதையை அமைத்து நடித்து(கர்த்தியு)ள்ளார் பார்த்திபன். திரையில் தோன்றுவது இவரும், வேறு சில கதாபாத்திரங்களின் குரல்கள் மட்டும் தான். உடல் நலம் பாதிக்கப்பட்ட மகன், கோவமான- சாந்தமான போலீஸ், ரோஸி என்கின்ற பெண் போலீஸ், எமோஷனலாக பேசும் மனைவி, டாக்டர் என அந்த கதாபாத்திரங்களை பற்றி கூட நாம் பேசிக்கொண்டே போகலாம் அந்தளவுக்கு நேர்த்தியும் நுணுக்கமும் .

இரண்டு மணி நேரம், பல ட்விஸ்டுகள், நம்மை திருப்பி போடும் திருப்பங்கள் என அசத்தல் சைக்கலாஜிக்கல் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் இப்படம். கிளைமாக்ஸ் நெருங்கும் சமயங்களில் பார்த்திபனுக்கு ஏதேனும் ஆகும் பட்சத்தில் அவர் மகனின் நிலை என்னவாகும் என்ற படப்பிடிப்பு நமக்கும் வந்து விடுகிறது. எப்படியாவது இவன் தப்பித்து விட வேண்டும் என சீட் நுனியில் வந்து நம்மை உட்காரவைத்து விடுகிறது இப்படம்.

சினிமாபேட்டை அலசல் – பணம் சம்பாதிக்க என்பதனை தாண்டி தன் மனதிருப்திக்காக அடிக்கடி படம் இயக்குவது பார்த்திபனின் ஸ்டைலில். பாராட்டை பெரும், ஏன் விருதுகள் கூட தட்டி செல்லும் பல நேரங்களில், ஆனால் பண வசூல் ஆகாது. ஆனால் இப்படம் பார்த்திபனுக்கு நற்பெயர், விருது மற்றும் பண லாபத்தையும் சேர்த்தே தரும்.

ஹாலிவுட் ஸ்டைலில் ஒன்றரை மணிநேரம் போட்டு, ஏ சென்டர் ரசிகருக்கு மட்டும் எடுத்து மல்ட்டிப்ளெக்ஸ் ரசிகர்களை கவரக்கூடிய கதைக்களம் தான் இப்படம். எனினும் நம் பாமர ரசிகனுக்கும் புரியும் வகையில் நிறுத்தி, நிதானமாக பயணித்த பார்த்திபனுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

ராம்ஜியின் ஒளிப்பதிவு, சத்யாவின் இசை, ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் டிசைன் என அனைத்துமே படத்துக்கு பிளஸ் தான்.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வரும் இன்றைய சூழலில் இது போன்ற படம், மக்களிடம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதுவே பார்த்திபன் அவர்களுக்கு கிடைத்த வெற்றி.  சத்தியமா இது தாங்க உலகத்தரத்தில் ஒரு தமிழ் சினிமா. யதார்த்தமும் நம்பகத்தன்மையும் இருப்பதே இந்த படத்தின் சிறப்பு. வாழ்த்த வயதில்லை பார்த்திபன் அவர்களே அதனால் சினிமாபேட்டை சார்பில் இந்த தரமான படத்துக்கு நன்றிகள்.

ஒத்த செருப்பு  7- ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் வெற்றி

சினிமாபேட்டை ரேட்டிங் – 3.5 / 5

Leave a Comment