Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. இதற்குமேல் என்ன செய்ய.. பார்த்திபன்
தமிழ் சினிமாவில் வசதி அதிகமாக இருக்கும் ஹீரோக்கள் கூட உதவி செய்ய யோசிக்கும் நேரத்தில் சராசரியாக வாழ்ந்துவரும் பார்த்திபன் தனது வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெரிய அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் கவனிக்கத்தக்க ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் பார்த்திபன். குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பார்த்திபன் கடந்த வருடத்தில் ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கிய உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்.
தற்போது கொரானா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதன் பரவல் அதிகமாகி வருகிறது. இதனால் போதிய மருத்துவமனை வசதிகள் இல்லாத நேரங்களில் தன்னுடைய வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதாபிமானமிக்க இந்த செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்று வருகிறது. ஆனால் சினிமாவில் அதிகம் சம்பாதித்து இரண்டு மூன்று வீடுகள் வைத்துக் கொண்டு, திருமண மண்டபங்கள் வைத்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர்கள் கூட இப்படி ஒரு யோசனையை கூறவில்லையே மக்களிடத்தில் ஒரு பக்கம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
நடிகர்கள் தானே அரசியல்வாதிகள் இல்லையே என்று கூறினாலும் அரசியல்வாதிகளும் நடிகர்களும் மக்களின் செல்வாக்கை நம்பித்தான் இருக்கிறீர்கள் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். காசு பணம் கொடுக்கவில்லை என்றாலும் உதவி என்று கூறுவதாவது மக்களுக்கு நிம்மதியை கொடுக்கும்.
பிரதமரின் ஆலோசனைப்படி இன்னும் 21 நாட்களுக்கு அனைவரும் வீட்டின் உள்ளேயே இருந்து கொரானாவை விரட்ட வழி செய்வோம். அதுமட்டுமல்லாமல் பார்த்திபன், அதிகம் வீடு வைத்திருப்பவர்கள் கூட மருத்துவமனையாக மாற்றும் இப்படி கோரிக்கையும் விடுத்துள்ளார்
