Tamil Nadu | தமிழ் நாடு
அரசியலால் ரஜினி படும் கஸ்டத்தை பார்க்கும் போது.. பார்த்திபன் கிண்டல்
அரசியலால் ரஜினி, கமல் படும் கஷ்டத்தில் நான் வேறு அரசியலுக்கு வர வேண்டுமா என்று இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கிண்டல் செய்துள்ளார்.
திரைப்பட நடிகரும், இயக்குனருமான இரா.பார்த்திபன் எழுதிய கிறுக்கல்கள் கவிதை தொகுப்பு மற்றும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா கோவை புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடிசி புத்தக கடையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், “சினிமான்றது பெரிய போராட்டம். இந்த போராட்டத்தை கடந்து தான் ஒவ்வொரு படமும் வெளிவருகிறது. தெய்வ மகன் முதல் தேவர் மகன் வரை தேசிய விருதிற்கு சென்றது. ஆனால் என்னுடைய ஒத்த செருப்பிற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.
அதனால் நானே 50 லட்சம் ரூபாய் செலவு செய்து ஆஸ்காருக்கு அனுப்பி வைத்தேன். தற்போது, இரவின் நிழல், துக்லக் தர்பார் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து வருவகிறேன். நகைச்சுவை உணர்வு கலைஞரிடம் இருந்து வந்தது.
என்னுடைய ஒத்தை செருப்பு படத்திற்கு அரசு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று வருத்தம் உள்ளது. அடுத்ததாக சிங்கில் ஷாட் படம் ஒன்றை எடுக்க உள்ளேன் ஒத்த செருப்பு படத்திற்கு விகடன் விருது கொடுக்கவில்லை.
நேசிப்பும் காதலும் தான் படம் , அதற்கு விகடன் மதிப்பு கொடுக்கவில்லை, புதிய பாதைக்கு 58 மார்க் கொடுத்த விகடன் ஒத்த செருப்பிற்கு 51 மார்க் கொடுத்தது வருத்தம் அளிக்கிறது.
இனி மேல் விகடன் குழுமத்திடம் இருந்து விருது வாங்க மாட்டேன். அரசியலால் ரஜினி,
கமல் படும் கஷ்டம் எனக்கு நன்கு தெரியும் என்ற பார்த்திபன், சினிமாவில் சாதித்த பின் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளது” இவ்வாறு கூறினார்.
