சினிமாவிற்கே புதிய பாதையை உருவாக்கிய பார்த்திபனின் 5 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்கள்தான்

ஒரு நடிகனாக, இயக்குநராக, தயாரிப்பாளராக பார்த்திபன் அனைத்திலும் கைதேர்ந்தவர் என்றே கூறலாம். 15 படங்களை இயக்கியுள்ளார், 14 படங்களை தயாரித்துள்ளார், கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் நடித்து விட்டார்.

இவர் கே பாக்யராஜின் படத்தில் துணை இயக்குனராக வேலை பார்த்தவர், கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் துணை இயக்குனராக வேலை பார்த்துள்ளார். பார்த்திபன் பாக்யராஜின் படைப்பு என்றே கூறலாம். இவர் படைப்பில் உருவான புதிய பாதை, ஹவுஸ்ஃபுல் போன்ற படங்கள் நேஷனல் பிலிம் அவார்டு விருதுகளை தட்டிச் சென்றது.

காமெடியாக கருத்துக்களை பதிவு செய்வதில் பார்த்திபன்,மணிவண்ணன்,விவேக் மிஞ்சய நடிகர்கள் தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என்றே கூறலாம். இவர் நடிப்பில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் பாரதிகண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றிக்கொடிகட்டு, அழகி, ஆயிரத்தில் ஒருவன், ஒத்த செருப்பு போன்ற படங்கள் உள்ளது.

தற்போது இவர் படைப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்று விருதுகளை தட்டிச் சென்ற படங்களின் வரிசைகளை பார்க்கலாம்.

புதிய பாதை:

பார்த்திபன் இயக்கி நடித்த படம், இந்த படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக அவர் மனைவி சீதா நடித்திருப்பார். கிட்டத்தட்ட 150 நாட்களை தாண்டி திரையரங்குகளில் திருடப்பட்டு வெற்றி கண்ட படம். வசூல் சாதனை படைத்துள்ளது, 2 நேஷனல் பிலிம் அவார்டு இன்னும் சில விருதுகளை தட்டிச் சென்றது. இப்படத்தின் வெற்றியை வைத்து கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 38 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டது.

முழு படம் பார்க்க: Click here

பாரதி கண்ணம்மா:

சேரன் இயக்கத்தில் பார்த்திபன், மீனா, விஜயகுமார், வடிவேலு பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது பாரதிகண்ணம்மா. பார்த்திபன் மற்றும் வடிவேலின் காமெடி இந்த படத்திற்கு மாபெரும் வெற்றியை தந்தது என்றே கூறலாம். பிரபுசாலமன் இந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்த ரசிகர்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

முழு படம் பார்க்க: Click here

நீ வருவாய் என:

ராஜகுமாரன் இயக்கத்தில் பார்த்திபன்,அஜித்குமார், தேவயானி போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த நீ வருவாய். அஜித் குமார் இந்த படத்தில் இறந்துவிடுகிறார், அவரின் கண்ணை எடுத்து பார்த்திபனுக்கு வைத்து விடுவார்கள். அதனால் அஜித்குமாருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்த தேவயானி பார்த்திபனை மிக நெருக்கமாக இருந்து பார்த்துக் கொள்வார். இதனால் பார்த்திபனுக்கு ஒரு தலை காதல் ஏற்பட்டு கதை நகரும், இந்த படம் ரசிகர் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. சூப்பர் ஹிட்டான படம் தமிழில் வெற்றி பெற்றதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

முழு படம் பார்க்க: Click here

வெற்றிக்கொடிகட்டு:

மீண்டும் சேரன் இயக்கத்தில் முரளி, பார்த்திபன், மீனா, வடிவேலு, மனோரமா, மாளவிகா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்து வெற்றி கொடி கட்டு. இந்த படத்தில் வெளிநாட்டிற்கு செல்வதாக மொத்த சொத்தையும் விற்று, அதில் ஏமாந்து ஒரு கீழ்தட்டு மக்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப் படுகிறார்கள், என்பதை சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டிய படம்.

இந்தப் படத்தில் பார்த்திபன் வடிவேலு காமெடி அதிகமான வரவேற்பு பெற்றது என்றே கூறலாம். சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த சார்லி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் பணத்தை இழந்து பைத்தியக்காரன் போல் நடித்திருப்பார் ரசிகர்களிடம் அதிக கைதட்டல்,கண்கலங்க வைத்த காட்சிகள் சார்லிக்கு உண்டு.

முழு படம் பார்க்க: Click here

அழகி:

தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி, விவேக் போன்ற பிரபலங்கள் நடிப்பில் இளையராஜா இசையில் வெளிவந்தது அழகி. பார்த்திபன், தேவயானி திருமணம் செய்து கொண்ட பின் பழைய காதலியாக நந்திதா தாஸ் இந்த படத்தில் நடித்திருப்பார், மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற படம்.

முழு படம் பார்க்க: Click here

Next Story

- Advertisement -