செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

அந்த மனசு தான் சார்.. துரோகம் செய்தவருக்கு கொடூர தண்டனையை கொடுத்த பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் நல்ல ஒரு கலைஞன் மட்டும் அல்ல.. நல்ல ஒரு மனிதர் என்பதையும் நிரூபித்துள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் டீன்ஸ் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் அடுத்தடுத்த படங்களை பார்த்திபன் இயக்கி வருகிறார்.

இவரது திரைப்பயணம் நீண்ட நெடிய பயணமாக கோலிவுட்டில் அமைந்து வருகிறது. தற்போது மற்ற இயக்குனர்களின் படங்களிலும் வில்லன். காமெடியன் என அடுத்தடுத்த கேரக்டர்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் active-ஆக இருக்கும் ஒருவர். தனது எதுகை மோனை பேச்சுக்களால் அனைவரையும் கவருவார்.

மன்னித்து விட்ட பார்த்திபன்

பொதுவாக ஒருவர் செய்யும் தவறுக்கு தண்டனை கொடுத்தாலோ, அல்லது அவர்களை திட்டினாலோ, அந்த வேதனை சிறிது நேரத்தில் மறைந்துவிடும். ஆனால் செய்த தவறுக்கு, “ஏன் இதை செய்தாய் ” என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல், அவர் தவறை மன்னித்து விட்டால், தவறு செய்தவர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி தினம் தினம் மரணிப்பார். தண்டனை தரும் வலியை விட இது கொடியது.

இப்படி பட்ட ஒரு கொடிய தண்டனையை தான் பார்த்திபன் கொடுத்துள்ளார். சமீபத்தில் தன்னுடைய அலுவலகத்தில் இருந்த 12 சவரன் நகைகளை காணவில்லை என நேற்றைய தினம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பார்த்திபன் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக தன்னுடைய உதவியாளர் கிருஷ்ண காந்த் என்பவர்மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவரது அலுவலகத்தில் 10 பேர் வேலை செய்துவந்த நிலையில், அதில் 6 பேர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில்தான் கிருஷ்ணா காந்த் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த நபர் எடுத்த நகையை திரும்ப பார்த்திபனுடன் கொடுத்து விட்டார். இதை தொடர்ந்து தான் கொடுத்த கேஸ் வாபஸ் வாங்கியுள்ளார் பார்த்திபன். மேலும் அவரை மன்னித்தும் விட்டுள்ளார். இது பலருக்கு இவர் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News