Connect with us
Cinemapettai

Cinemapettai

parthiban

Entertainment | பொழுதுபோக்கு

பார்த்திபன் பூஜை போட்டு பின்பு கைவிடப்பட்ட 4 படங்கள்.. தேசிய விருது மிஸ் ஆயிடுச்சு என புலம்பல்

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பார்த்திபன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சமூக கருத்தை மையப்படுத்தியே இருக்கும்.

90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் பார்த்திபன் இவர் இயக்குனராக மட்டும் பணியாற்றாமல் நடிகராகவும் சினிமா துறையில் பணியாற்றி தனக்கென ஒரு சில ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார்.

ஒரு காலத்தில் அவர் அளவுக்கு எந்த ஒரு இயக்குனரும் படத்திற்கு பூஜை போடவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அன்றைய காலத்தில் முன்னணி இயக்குனராக கொடிகட்டி பறந்தார். ஆனால் இவரால் பூஜை போடப்பட்டு பின்பு கைவிடப்பட்ட படங்களை தற்போது பார்ப்போம்.

சீம பசு: இப்படத்திற்கு பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்டு பின்பு ஏதோ ஒரு சில காரணங்களால் படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

சோத்துக்கட்சி: பார்த்திபன் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க அரசியல் மற்றும் நையாண்டி கலந்த காமெடி கதையை வைத்து சோத்து கட்சி எனும் பெயரில் அரசியலை விமர்சிக்கும் வகையில் உருவாக்கியிருந்தார்.

parthiban

parthiban

காங்கேயம் காளை: காங்கேயம் காளை படத்தின் போஸ்டர் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அந்த அளவுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது ரவளி என்ற நடிகை அப்பொழுது ஃபேமஸ் ஆக இருந்ததால் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது.

அவரையும் காளையும் நீக்கிவிட்டு போஸ்டர் போடப்பட்டதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று குறைய எதிர்ப்பு அதிகரித்தது. இதனால் இப்படம் வெளிவரவில்லை.

ஏலேலோ: பார்த்திபன் கனவு படமாக இருந்தது ஏலேலோ திரைப்படம். இப்படத்திற்கு ஆர் ரகுமான் இசையமைக்க இருந்தார், இப்படத்திற்காக ஒரு பெரிய கிராமத்து செட் போடப்பட்டு பின்பு ஏதோ ஒரு சில காரணங்களால் இப்படம் வெளிவரவில்லை.

மேற்கண்ட அனைத்து படங்களுமே என்ன காரணம் என்ற உண்மையை வெளிவரவில்லை, ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களால் மட்டுமே இப்படங்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்காக இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top