‘கொம்பன்’, ‘தோழா’ வெற்றிக்கு பிறகு மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் கார்த்தி. இவர் தற்போது நடித்துவரும் ‘கஷ்மோரா’ படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

இப்படத்தில் அதிதி ராவ் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை:  அப்செட்டான மணிரத்னம் ஹீரோயின்!

அதன்படி, ‘காற்று வெளியிடை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பாரதியாரின் ‘காற்று வெளியிடை கண்ணம்மா – நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் – அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்’ என தொடங்கும் பாடலில் இருந்து இந்த தலைப்பை தேர்வு செய்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  மணிரத்னம் படத்தில் இணைந்த கோச்சடையான் நடிகை

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஊட்டியில் தொடங்குகிறது. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படத்தில் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக நடிகர் பார்த்திபனின் மகள் கீர்த்தனா பணியாற்றுகிறார். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னமே தயாரிக்கிறார்.