Tamil Cinema News | சினிமா செய்திகள்
பரியேறும் பெருமாள் கருப்பியின் அடுத்த படம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் நல்ல வரவேற்பை பெற்றது நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
Published on

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் நல்ல வரவேற்பை பெற்றது நல்ல விமர்சனங்களையும் பெற்றது.
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் அளவுக்கு அந்தப் படத்தில் நடித்த கருப்பி என்ற நாய்க்கு நல்ல பெயர் கிடைத்தது.
இப்பொழுது கருப்பி அடுத்து திரைப்படத்தில் நடிக்க இருக்கிறது. அந்த படத்தின் பெயர் ஆத்தா. இந்தப் படத்தில் கருப்பி ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கிறது.
மேலும் புதுமுகங்களுடன் நடிகர் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
