Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த கூட்டத்தை நம்ப முடியுமா? இனி பரியேறும் பெருமாள் கையில்
ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் ஆனந்தி நடித்து வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் ட்ரெய்லரிலேயே நல்ல வரவேற்பை பெற்றது. டிரெய்லரில் நன்றாக செய்துவிட்டு படத்தில் கோட்டை விடுவார்கள் நம் கோலிவுட்காரர்கள். ஆனால் பரியேறும் பெருமாள் அதனை மாற்றியிருக்கிறது.வழக்கமாக நல்ல குறைந்த பட்ஜெட் படங்கள் என்றால் தியேட்டருக்கு செல்லாமல் இன்டர்நெட்டில் படத்தை பார்ப்பவர்கள் தான் ஜாஸ்தி, அப்படி பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட்டம் இன்று கூடிவிட்டது.

Pariyerum-Perumal-Trailer
செக்கச் சிவந்த வானம் படம் வெளிவந்ததால் பரியேறும் பெருமாள் படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதனால் குறைந்த அளவு தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்தார்கள். செக்கச் சிவந்த வானம் நல்ல விமர்சனங்களை ஆரம்பத்தில் பெற்றாலும் போகப்போக சற்று அதன் விமர்சனத்தின் நிலைமை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பரியேறும் பெருமாள் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாம் என்று ரசிகர்களும் தியேட்டர்காரர்களும் விரும்புகிறார்கள்.
இதனால் குறைந்த அளவு தியேட்டர்கள் மட்டுமே ரிலீஸ் செய்யப் பட்டிருந்த பரியேறும் பெருமாள் இனிமேல் அதிக திரையரங்குகளில் திரையிட முடிவு செய்துள்ளனர் நல்ல படங்களுக்கு எப்போதுமே நம்ம ஊரில் வரவேற்பு இருக்கிறது என்பதற்கு பரியேறும் பெருமாள் ஒரு உதாரணம். இந்த ஆதரவை நம்பி கண்டிப்பாக பல தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாம் லாபம் வரும் என்று நம்புகின்றனர்.
