Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரண்டாவது முறையாக இணையும் பரியேறும் பெருமாள் கூட்டணி.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய படம்
பரியேறும் பெருமாள் படம் கூட்டணி இரண்டாவது முறையாக இணைய உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறை எந்த பிரச்சனையை கையில் எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
மிகச் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதியை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த படத்தில் கதிர் மற்றும் கயல் ஆனந்தி ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது அதே கூட்டணியில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். இந்த முறை புதிய இயக்குனருடன் களமிறங்கவுள்ளனர்.

pariyerum-perumal-combo
திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தை சாக் ஹாரிஸ் என்பவர் இயக்கவுள்ளார். சாக் ஹாரிஸ் என்பவர் வெளிநாட்டில் சினிமா தொழில் பயிற்சி கற்றவராம். புதிய கூட்டணியில் உருவாகும் படத்தை பற்றிய பேச்சுக்கள் தற்போது கோலிவுட்டில் அதிகமாக உள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தில் ஜோடி தான் எங்களுக்கு வேண்டும் என கேட்டு வாங்கி உள்ளார்களாம். படம் முழுக்க புதுமுகங்கள் அறிமுகமாக உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
கதிர் சமீபகாலமாக பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய வெற்றிப் படங்களைக் கொடுக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி குறுகிய காலத்தில் இந்த படம் முழுவதும் உருவாகும் என்கிறார்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
