Connect with us
Cinemapettai

Cinemapettai

paarivendhar-mp

India | இந்தியா

தமிழில் பதவியேற்ற எம்பிகளுக்கு பாஜகவினர் எதிர்ப்பு.. ஒரு வரியில் பிரச்சனையை முடித்த பாரிவேந்தர்

தமிழகத்தில் வெற்றி பெற்ற 38 எம்பிக்களும் இன்று தமிழில் பேசி பதவி பிரமாணம் செய்து ஆச்சர்ய படுத்தினர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர்களை கண்டுகொள்ளாமல் தமிழிலேயே பதவியேற்றனர்.

இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் 38 வேட்பாளர்கள் வெற்றி பெற்று இன்று பதவியேற்கின்றனர். அதில் பதவியேற்ற அனைவரும் தமிழ் மொழியில் பேசி பெரியார் வாழ்க, தமிழ் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, என ஒரு ஒருவர் ஒரு தலைவரையும்,தமிழையும் வாழ்க என  சொல்லி பதவியேற்றனர்.

இதற்கு பாஜக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து “பாரத் மாதா கி ஜே” என்று புகழ் பாடினார். ஆனால் திமுகவினர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வந்த அனைவரும் தமிழிலேயே பேசி அதிர்வலையை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் பாரிவேந்தர் பதவியேற்கும் பொழுது தமிழகம் வாழ்க இந்தியாவும் வாழ்க என்று கூறி பதவியேற்றார். இதற்கு எதிர் கட்சியில் இருந்தும் பலரும் கைதட்டினர். அதற்குப் பிறகு தமிழில் பதவியேற்க வந்த அனைவருக்கும் எந்த எதிர்ப்பும் வரவில்லை அமைதியாக நடந்து முடிந்தது. முதல் நாளே இப்படி ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கதுதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top