கோபி, சுதாகரை நம்பி பணம் போட்ட 25 ஆயிரம் பேர்.. 6 கோடியை சுருட்டியது யார் பரிதாபங்கள் கொடுத்த விளக்கம்

Gopi-sudhakar: கோபி, சுதாகரை தெரியாத ஆட்களை இருக்க முடியாது என்ற அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள். ஆரம்பத்தில் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை சந்தித்த இவர்கள் பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை தொடங்கினர்.

அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை மிகவும் நகைச்சுவையாக தனக்கே உண்டான பாணியில் வீடியோக்கள் வெளியிட்டு வந்தனர். இதனால் இவர்களது யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப்பர்கள் அதிகமானார்கள். இதை தொடர்ந்து வெள்ளி திரையிலும் இவர்கள் பிரபலம் அடைய ஆசைப்பட்டனர்.

இந்த சூழலில் இவர்களது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. அதாவது கிரவுண்ட் ஃபண்ட் மூலம் பணம் வசூலித்து அதன் மூலம் படம் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். அதில் கிட்டத்தட்ட ஆறு கோடி மோசடி செய்ததாக சர்ச்சை எழுந்தது.

பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் கொடுத்த பேட்டி

இதுகுறித்து கோபி மற்றும் சுதாகர் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருந்தனர். அதாவது கிரவுட் ஃபண்ட்டில் பீரவீன் ஜெயக்கொடி என்பவரிடம் முழு பொறுப்பையும் கோபி, சுதாகர் கொடுத்தனராம். ஆரம்பத்தில் கணக்கு வழக்குகளை சரியாக காட்டியுள்ளார்.

மேலும் கடந்த 3 வருடங்களில் 30 லட்சம் மட்டுமே படப்பிடிப்புக்கு செலவு செய்ததாகவும், மீதம் உள்ள பணத்தை கொடுக்காமல் பிரவீன் இழுத்தடிதாராம். அதன் பிறகு தான் அவர் பணத்தை கொடுக்காமல் அதில் முறைகேடு செய்தது தெரிய வந்தது.

ஏற்கனவே அவர் மீது மோசடி புகார் உள்ள நிலையில் இது குறித்தும் போலீசில் புகார் அளித்துள்ளோம் என்ற கோபி, சுதாகர் கூறினர். மேலும் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வரும் தொகையை பணம் கொடுத்த சிலருக்கு திருப்பிக் கொடுத்துள்ளோம் என்று கூறினார்கள். மேலும் இப்போது படம் 90% நிறைவடைந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் முழுசாக படப்பிடிக்க முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளனர்.

Next Story

- Advertisement -