கங்கனா ரனாவத் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்து பெருவெற்றி பெற்ற திரைப்படம் குயின். நகைச்சுவை திரைப்படமான இது பெரு வெற்றி பெற்றதுடன் கங்கனாவிற்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

தற்போது இதன் தமிழ் ரிமீக்கில் கங்கனா வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படத்திற்கு பாரிஸ் பாரிஸ் (பட்டர் ப்ளை) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இன்று முகநூலில் லைவ்வாக இப்படத்தின் official launch நடந்தது.

வெளியீட்டின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் பாருங்கள்

http://fb.me/mediente

இந்த படம் தனது வாழ்நாளில் பெரிய திருப்பத்தை கொண்டு வரும் என்று காஜல் தெரிவித்துள்ளார். தமிழில் இந்த படம் எந்த அளவிற்கு வெற்றி பெரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.