News | செய்திகள்
ஏ.ஆர்.முருகதாஸ் மூலம் தமிழுக்கு வரும் பரினீதி சோப்ரா
ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பார் என்று தெரிகிறது. படத்தில் மூன்று ஹீரோயின்கள். முதன்மை ஹீரோயினாக இந்தி நடிகை பரினீதி சோப்ரா நடிக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் சாய்பல்லவி மற்ற ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ‘இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் நடிக்க பரினீதி அதிக சம்பளம் கேட்டிருந்தார். கடைசியில் முருகதாஸ் பேசி முடித்து வைத்தார். பரனீதி, தமிழ், தெலுங்கில் அறிமுகமாகும் படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என நினைத்தோம். அதன்படி சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, டாப் இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதன் மூலம் அது நிறைவேறியிருக்கிறது. படத்தில் மூன்று ஹீரோயின்கள் என்றாலும் பரனீதி சோப்ராவுக்கு முக்கியத்துவம் இருக்கிறது’ என்று பரனீதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
