Tamil Cinema News | சினிமா செய்திகள்
உயிருக்கு ஆபத்தான நிலையில் பரவை முனியம்மா.. கண்டுகொள்ளாத சினிமா சங்கங்கள்
தமிழ் சினிமாவில் ஒரே பாட்டு மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த பரவைமுனியம்மா இன்று உடல் நலக்குறைவால் மிகவும் சிரமப்படுகிறார். அவர் இன்று படுத்த படுக்கை யாகவே இருக்கிறார் பாடகியாகவும் குணசித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த பரவை முனியம்மா பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருதையும் வாங்கியுள்ளார். அதன் மூலம் வரும் உதவித்தொகையை வைத்துக்கொண்டுதன்னுடைய மகன்களுக்கு திருமணம் செய்து வைத்தார். கணவன் இறந்த பின் சோகமாகவே இருந்தார் பட வாய்ப்புகள் குறைய என்று யாரும் ஆதரவின்றி காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
இதுவரை எந்த சங்கங்கள், அரசாங்கமோ இவருக்கு உதவிக்கரம் நீட்ட வில்லை, இன்று சினிமா கலைஞர்களுக்கு எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில் இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா பணம் இல்லாமல் மேல் சிகிச்சை பெற முடியாமல் இப்பொழுது வீட்டிலேயே மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். பரவை முனியம்மாவை விசாரித்த பொழுது எனக்கு யாரும் உதவி செய்யவில்லை நான் இறந்த பிறகு அரசாங்கம் தரும் உதவியை என் குடும்பத்திற்கு தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

paravai-muni
