கோவை, கணபதி அருகே உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் காகித கோப்பையில் அப்துல் கலாமின் முகத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை முயற்சி செய்துள்ளனர்.

கணபதி அருகே உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஒன்றாக இணைந்து 10,560 சதுரடி பரப்பில், 2 லட்சத்து 35 ஆயிரம் காகித கோப்பையை பயன்படுத்தி அப்துல் கலாம் உருவத்தை உருவாக்கி அசத்தினர்.

மொத்தம் 5 வண்ணங்கள் உள்ள கோப்பைகளை பயன்படுத்தி சுமார் 3 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொண்டு அசத்தலாக கலாமின் முக உருவத்தை உருவாக்கினர்.

கடந்த 2016ல் லக்னோவில், 1 லட்சத்து 40 ஆயிரம் கோப்பைகளை பயன்படுத்தி, 627 சதுரடியில் வோடஃபோன் லோகோவை உருவாக்கியதே கின்னஸ் சாதனையாக இருந்தது.

தற்போது 10,560 சதுரடியில் கலாமின் உருவத்தை உருவாக்கியுள்ளதால், இந்த முயற்சி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என நம்புவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.