Tamil Cinema News | சினிமா செய்திகள்
கௌதமி வேண்டாம்.. பாபநாசம் 2 படத்தில் கமலின் ஜோடி யார் தெரியுமா.?
மோகன்லால், மீனா நடிப்பில் திரிஷ்யம் – 2 திரைப்படம் OTT தளத்தில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தில் எப்போது நடிக்கப் போகிறார் என்ற அப்டேட் வந்த வண்ணம் உள்ளன.
ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பு பல பிரச்சனைகளை சந்தித்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ்ஜின் விக்ரம் படத்திலும் கமிட்டாகியுள்ளார் கமலஹாசன்.
இந்த நிலையில் வெறும் 30 நாட்களில் பாபநாசம் 2 படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார் கமலஹாசன். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது. பாபநாசம் 2 படத்தை ஜீத்து ஜோசப் இயக்க, நடிகை ஸ்ரீபிரியா தயாரிக்க உள்ளாராம்.
இது ஒருபுறமிருக்க கமல்ஹாசனுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் கௌதமி நடித்திருப்பார். கௌதமி தற்போது கமல்ஹாசனுடன் இல்லற வாழ்க்கையில் இல்லை. இதனால் சினிமாவிலும் இருக்க மாட்டார் என்பது உறுதியாகி விட்டது.
ஆகையால் திரிஷ்யம் படத்தில் நடித்த மீனாவை கமலஹாசனுடன் ஜோடியாக நடிக்க வைக்கலாமா என்ற திட்டத்தில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். இது உறுதியாகி விட்டால் 30 நாட்களில் கமலஹாசன் படப்பிடிப்பை முடித்து விடுவாராம்.

drishyam2
எப்படி ஒரு மலையாள படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது அதேபோல் பாபநாசம் 2 மலையாள மக்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
