Connect with us
Cinemapettai

Cinemapettai

முதல்முறையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் 54 வயது நடிகை.. பாபநாசம்-2 பொருத்தமான ஜோடி!

papanasam-2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல்முறையாக கமல்ஹாசனுடன் ஜோடி சேரும் 54 வயது நடிகை.. பாபநாசம்-2 பொருத்தமான ஜோடி!

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திரிஷ்யம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெற்றி கண்ட இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது.

லாக் டவுன் சமயத்தில் ரசிகர்களை கொண்டாட வைத்தது. பாபநாசம் படத்தில் தமிழின் முதல் பாகத்தில் கமலஹாசன் மற்றும் கௌதமி நடித்திருப்பார்கள்.

இரண்டாம் பாகத்தில் கௌதமிக்கு பதிலாக யாரை போடுவது என்ற குழப்பத்தில் இருந்தது படக்குழு. அதாவது கௌதமி மற்றும் கமலஹாசனுக்கு இடையே ஏற்கனவே பிரச்சினைகள் இருந்ததால் எப்படி இருக்கு தீர்வு காண முடியும் என்ற குழப்பத்தில் இருந்தது.

மோகன்லாலுடன் நடித்த மீனாவே எப்படியாவது பேசி விடலாம் என்று முயற்சித்தபோது நதியாவை ஜோடியாக கமலஹாசனுக்கு போடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. நதியா ஒப்புக்கொண்டால் கமலஹாசனுடன் முதல்முறையாக ஜோடி சேர்வார்.

கமல்ஹாசன் மற்றும் நதியாவிற்கு இடையே ஏகபோக பொருத்தம் இருக்கும் என்றும் ரசிகர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கமலஹாசன் ஏற்கனவே இந்தியன்-2 பட பிரச்சினையில் சிக்கியுள்ளார். இதைத்தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

nadhiya-cinemapettai

nadhiya-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top