modi panneer selvam

பன்னீருக்கு முழு ஆதரவளித்த மத்திய அரசு தற்போது அதனை எடப்பாடி தரப்பிற்கு கொடுக்கத் தொடங்கி விட்டது. தினகரன் தரப்பும் பா.ஜ.கவுடன் தொடர்பில் உள்ளதாகவே கூறப்படுகிறது.

பன்னீரின் சுற்றுப்பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பிசுபிசுத்து போயுள்ளது. கூட்டம் சேர்வதை தடுக்க எடப்பாடி அணி கையாண்ட அனைத்து யுக்திகளும் நல்ல பயனை கொடுத்துள்ளதாம்.

அதிகம் படித்தவை:  மோடி அறிவிப்பு! கவலையே இல்லை அஜீத்? தப்பித்தது 100 கோடி?

இதனால் ஒவ்வொரு கூட்டமும் பெரும் சோதனைகளுக்கு பிறகே நடைபெற்று வருகிறதாம். மக்களின் ஆதரவு பெருமளவு குறைந்து போய் உள்ளதால் பன்னீரும் சோர்வாகவே காணப்படுகிறார். இதன் வெளிப்பாடாகவே எங்களால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படாது என பன்னீர் தடாலடியாக நேற்று தெரிவித்தார்.

“மோடி சார், நமக்கும் ஆதரவு தருகிறார். அவர்களுக்கும் ஆதரவு தருகிறார். இவரை நம்பி இறங்கியது பெரிய தப்பாக போய்விட்டது” என நெருங்கியவர்களிடம் புலம்புகிறாராம் பன்னீர். சசிகலா குடும்பத்தை விளாசும் முனுசாமியை பேசக் கூடாது என தடை உத்தரவு போட்டுள்ளாராம் பன்னீர்.

அதிகம் படித்தவை:  இனி வருமான வரி இல்லையா? மோடியின் அடுத்த அதிரடி

இதனால் பன்னீர் கூட்டங்களில் அதிரடிகள் குறைந்து, அண்ணன் ஏன் இப்படி ஆகிவிட்டார் என தொண்டர்கள் கண்ணீர் விடுகின்றனராம்.