ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தற்போது 3 அணிகளாக பிரிந்துள்ளது. அதில் சசிகலா அல்லாத புதிய அணியை உருவாக்க எடப்பாடி மற்றும் பன்னீர் அணியினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் பன்னீர் அணியின் கோரிக்கைகளை எடப்பாடி அணியினர் ஏற்காததால் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு வந்தது.

பன்னீர் அணியினர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது எடப்பாடி அணியில் உள்ள ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. மேலும் பேச்சுவார்த்தை குறித்து இரு அணியிலும் தனித்தனியாக அணிகள் உருவாக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பேச்சுவார்தையில் ஏற்பட்ட இழுபறி மற்றும் இரு அணியிலும் விரிசல் விரிவடைந்து வருகிறது. எனவே பன்னீர் செல்வம் தனது பேச்சுவார்த்தை குழுவை கலைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பன்னீர் அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சுற்றுப்பயணம் மே 5ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல் பன்னீர் செல்வம் தனது அணியை பா.ஜவுடன் இணைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காகதான் பன்னீர் செல்வம் தனது குழுவையும் கலைக்கிறார். தமிழகத்தில் காலுன்ற முடியாத பா.ஜவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்சியை பலப்படுத்த முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.